Roman script
Singers : P. Unnikrishnan and Sujatha Mohan Music by : Yuvan Shankar Raja Female Part Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae Female Part Oru paarvai paarthu naan nindraal Siru poovaaga nee malarvaayae Oru vaarthai ingu naan sonnaal Vali pogum yen anbae anbae Female Part Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae Female Part ………………………………… Female Part Kannaadi yendrum udainthaalum kooda Pimbangal kaatum paarkindren Puyal pona pinnum puthu pookal pookum Ilavenil varai naan irukindren Female Part Muga moodi anigindra ulagithu Un mugam yendru ondrengu yennathu Nathi neerilae ada vizhunthaalumae Antha nilavendrum nanaiyadhae vaa nanbaa Female Part Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae Male Part Kaalangal odum idhu kadhaiyaagi pogum En kanneer thuliyin eeram vaazhum Thaayaaga neethaan thalai kotha vanthaalum Madimeethu meendum jananam vendum Male Part Yen vaazhkai nee ingu thanthathu Adi un naatkal thaanae ingu vaazhvathu Kaadhal illai ithu kaamam illai Intha uravuku ulagathil peyarillaiii Whistling : ……………………………. Male Part Oru paarvai paarthu nee nindraal Siru poovaaga naan malarvenae Oru vaarthai ingu nee sonnaal Vali pogum yen anbae anbae Male Part Nenjodu kalanthidu uravaalae Kaalangal maranthidu anbae Nilavodu thendralum varum velai Kaayangal maranthidu anbae
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே பெண் : ஒரு பார்வை பார்த்து நான் நின்றால் சிறு பூவாக நீ மலர்வாயே ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே பெண் : ........................... பெண் : கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன் புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும் இளவேனில் வரை நான் இருக்கின்றேன் பெண் : முகமூடி அணிகின்ற உலகிது உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது நதி நீரிலே அட விழுந்தாலுமே அந்த நிலவென்றும் நனையாதே வா நண்பா பெண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே ஆண் : காலங்கள் ஓடும் இது கதையாகி போகும் என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும் தாயாக நீதான் தலை கோத வந்தாலும் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும் ஆண் : என் வாழ்க்கை நீ இங்கு தந்தது அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது காதல் இல்லை இது காமம் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை விஷ்லிங் : .............................. ஆண் : ஒரு பார்வை பார்த்து நீ நின்றால் சிறு பூவாக நான் மலர்வேனே ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால் வலி போகும் என் அன்பே அன்பே ஆண் : நெஞ்சோடு கலந்திடு உறவாலே காலங்கள் மறந்திடு அன்பே நிலவோடு தென்றலும் வரும் வேளை காயங்கள் மறந்திடு அன்பே
Song information
Singers: P. Unnikrishnan and Sujatha Mohan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kaadhal Kondein (2003) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: P. Unnikrishnan and Sujatha Mohan
- Film / album: Kaadhal Kondein
- Composer: Yuvan Shankar Raja