தமிழ்

ஆண்: பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில்
வெச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கெடைக்குமா
பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பெண்: ராசாவே வருத்தமா
ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே
அத உலகம் தாங்காதே
அடுக்குமா
சூரியன் கருக்குமா
ஆண்: என்ன சொல்லுவேன்
என்னுள்ளம் தாங்கல
மெத்த வாங்குனேன்
தூக்கத்த வாங்கல
பெண்: இந்த வேதன
யாருக்குத்தான் இல்ல
ஒன்ன மீறவே
ஊருக்குள் ஆளில்ல
ஆண்: ஏதோ என் பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்த
சொன்னேனடி
பெண்: சுக ராகம் சோகந்தானே
சுக ராகம் சோகந்தானே
ஆண்: யாரது போறது
பெண்: குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா
ஆண்: பூங்காற்று திரும்புமா
என் பாட்ட விரும்புமா
பாராட்ட மடியில் வெச்சு தாலாட்ட
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா
ஆண்: உள்ளம் அழுகுறேன்
வெளிய சிரிக்கிறேன்
நல்ல வேஷந்தான்
வெளுத்து வாங்குறேன்
பெண்: உங்க வேஷந்தான்
கொஞ்சம் மாறனும்
எங்க சாமிக்கு
மகுடம் ஏறனும்
ஆண்: மானே என் நெஞ்சுக்குப்
பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு
வாவா பெண்ணே
பெண்: எசப் பாட்டு படிச்சேன் நானே
எசப் பாட்டு படிச்சேன் நானே
ஆண்: பூங்குயில் யாரது
பெண்: கொஞ்சம் பாருங்க
பெண் குயில் நானுங்க
ஆண்: அடி நீதானா அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே
பெண்: நான்தானே அந்தக் குயில்
தானாக வந்தக் குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா உலகந்தான் மறந்ததா

Song details

படம்: முதல் மரியாதை (1985)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், எஸ் ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: முதல் மரியாதை

Song video

Watch on YouTube