Roman script

Singer : Jithin Raj

Music by : Yuvan Shankar Raja

Male Part

Ohhhoooo…

Mudhal murai mazhai paarkum

Pillaiyai pol naanae

Vizhi virinthida paarthenae

Aval ulagathil veezhnthenae

Male Part

Idhu varai suvai theetum

Nodigalai thotrenae

Aval thiruthida poothenae

Pudhu pulangalai serthenae

Male Part

Karai patta ottai thotti

Thinam paarthu thaandi sendren

Adhu vaasal poovai yendhi

Uyir thaanga indrae kanden

Male Part

Manathodu nesam pesum kangal

Namakkendrae nirkum kaalgal

Naam thozhlai thattum kaigal

Male Part

Chinna chinna artham undaakinaal

Ini sugam mattum endraakinaal

Nizhalukkul sirpam undaakinaal

Nijam indha kanneer endraakinaal

Male Part

Yen thondrinen

Vaazhgiren

Unarnthu kolla neram indri

Odinen odu odinen

Yen ennai maatrinaal

Male Part

En kobamum

Kaayamum

Thoora veesi kaayum nenjil

Eeram poosi thoosi neeki

Thooimai aakinaal

Male Part

Yen vaazhvil oramai

Oyaatha peralai

Anaiyaatha kaatrilae

Anbindru neralai

Male Part

Chinna chinna artham undaakinaal

Ini sugam mattum endraakinaal

Nizhalukkul sirpam undaakinaal

Nijam indha kanneer endraakinaal

Male Part

Mudhal murai mazhai paarkum

Pillaiyai pol naanae

Vizhi virinthida paarthenae

Aval ulagathil veezhnthenae

Male Part

Idhu varai suvai theetum

Nodigalai thotrenae

Aval thiruthida poothenae

Pudhu pulangalai serthenae..

Hey hey heeyyyy…

தமிழ்

பாடகர் : ஜித்தின் ராஜ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓஹோ...ஓஓ.....

முதல் முறை மழை பார்க்கும்

பிள்ளையை போல் நானே

விழி விரிந்திட பார்த்தேனே

அவள் உலகத்தில் வீழ்ந்தேனே

ஆண் : இது வரை சுவை தீட்டும்

நொடிகளை தோற்றேனே

அவள் திருடிட பூத்தேனே

புது புலன்களை சேர்த்தேனே

ஆண் : கரை பட்ட ஓட்டை தொட்டி

தினம் பார்த்து தாண்டி சென்றேன்

அது வாசல் பூவை ஏந்தி

உயிர் தாங்க இன்றே கண்டேன்

ஆண் : மனதோடு நேசம் பேசும் கண்கள்

நமக்கென்றே நிற்கும் கால்கள்

நம் தோளை தட்டும் கைகள்

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்

இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்

நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்

நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்

ஆண் : ஏன் தோன்றினேன்

வாழ்கிறேன்

உணர்ந்து கொள்ள நேரம் இன்றி

ஓடினேன் ஓடோடினேன்

ஏன் என்னைமாற்றினாள்

ஆண் : என் கோபமும் காயமும்

தூர வீசி காயும் நெஞ்சில்

ஈரம் பூசி தூசி நீக்கி

தூய்மை ஆக்கினாள்

ஆண் : ஏன் வாழ்வில் ஓரமாய்

ஓயாத பேரலை

அணையாத காற்றிலே

அன்பின்று நேரலை

ஆண் : சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்

இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்

நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்

நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்

ஆண் : முதல் முறை மழை பார்க்கும்

பிள்ளையை போல் நானே

விழி விரிந்திட பார்த்தேனே

அவள் உலகத்தில் வீழ்ந்தேனே

ஆண் : இது வரை சுவை தீட்டும்

நொடிகளை தோற்றேனே

அவள் திருடிட பூத்தேனே

புது புலன்களை சேர்த்தேனே

ஹே ஹே ஹே........

Song information

Singer: Jithin Raj

Music by: Yuvan Shankar Raja

Release information: From Irumbu Thirai (2018) · Lyricist: Vivek

Explore this song