Roman script
Singers : Yuvan Shankar Raja and Siddharth Music by : Yuvan Shankar Raja Lyrics by : Madhan Karky Male Part Por yedhum illai Veredhum illai Aanaalum boomi Adhirvadhu yen..?solladi? Male Part Vinmeengal illai Nilaavum illai Aanaalum vaanam Kulirvadhu yen..?solladi? Male Part Imaigal moodamalae Irudhayam thaan paarkudha Irupadhu kaal paaichalil Iru vizhiyum oodudha Male Part Marubadi nee Marubadi nee Male Part Por yedhum illai Veredhum illai Aanaalum boomi Adhirvadhu yen..?solladi? Male Part Vinmeengal illai Nilaavum illai Aanaalum vaanam Kulirvadhu yen..?solladi? Male Part Adhikaalai kadhiragavae Udhithaayae pudhidhaakkave Unnaalae vidivondru ennil pennae Male Part Thadamilla manalaagavo Alaiyilla punal aagavoo Vaazhndhenae nee paadham vaikkum munnae Male Part Peralaiyaai endhan vaanathin theenda vandhaaya Kaar mugilaai endhan nenjathin aazham thaanda vandhaaya Male Part Kaatru ena ennai nee thooimai sedhu odi povaaya Kaayam ena eppodhum nee en thozhi aavaaya Male Part Kelvi kokkiyil Maati konda nee Endhan boomiyil Marubadi nee marubadi nee Male Part Pirindhaalum piriyamalae Oru poovum udhiramalae En nenjin kaadengum Endrum neeyae Male Part Yugam ellam kadanthaalumae Thaniyaai naan nadanthaalumae En theeyin nizhalaga endrum neeyae Male Part Vaasanaigal kodi En vaanil veesa moochilandhenae Un varavin ottrai vaasathukaaga kaathirunthenae Swaasam ena unnai utkollum seigai meemigai illai Kaadhal ena naan unnai sonnal nyaayamum illai Male Part Sollil sikkidaa Artham pola nee Kannil sikkinaai Marubadi nee marubadi nee
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சித்தார்த் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை ஆனாலும் பூமி அதிர்வது ஏன்? சொல்லடீ! ஆண் : விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை ஆனாலும் வானம் குளிர்வது ஏன்? சொல்லடீ ஆண் : இமைகள் மூடாமலே இருதயம் தான் பார்க்குதா இருபது கால்பாய்ச்சலில் இரு விழியும் ஓடுதா ஆண் : மறுபடி நீ மறுபடி நீ ஆண் : போர் ஏதும் இல்லை வேறேதும் இல்லை ஆனாலும் பூமி அதிர்வது ஏன்? சொல்லடீ! ஆண் : விண்மீன்கள் இல்லை நிலாவும் இல்லை ஆனாலும் வானம் குளிர்வது ஏன்? சொல்லடீ ஆண் : அதிகாலை கதிராகவே உதித்தாயே புதிதாக்கவே உன்னாலே விடிவொன்று என்னில் பெண்ணே ஆண் : தடமில்லா மணலாகவோ அலையில்லா புனலாகவோ வாழ்ந்தேனே நீ பாதம் வைக்கும் முன்னே ஆண் : பேரலையாய் எந்தன் வானத்தின் தீண்ட வந்தாயா? கார்முகிலாய் எந்தன் நெஞ்சத்தின் ஆழம் தாண்ட வந்தாயா? ஆண் : காற்று என என்னை நீ தூய்மை செய்து ஓடி போவாயா காயம் என எப்போதும் நீ என் தோழி ஆவாயா? ஆண் : கேள்விக் கொக்கியில் மாட்டிக் கொண்ட நீ எந்தன் பூமியில் மறுபடி நீ மறுபடி நீ ஆண் : பிரிந்தாலும் பிரியாமலே ஒரு பூவும் உதிராமலே என் நெஞ்சின் காடெங்கும் என்றும் நீயே ஆண் : யுகம் எல்லாம் கடந்தாலுமே தனியாய் நான் நடந்தாலுமே என் தீயின் நிழலாக என்றும் நீயே ஆண் : வாசனைகள் கோடி என் வானில் வீச மூச்சிழந்தேனே உன் வரவின் ஒற்றை வாசத்துக்காக காத்திருந்தேன் சுவாசம் என உன்னை உட்கொள்ளும் செய்கை மீமிகை இல்லை காதல் என நான் உன்னை சொன்னால் நியாயமும் இல்லை ஆண் : சொல்லில் சிக்கிடா அர்த்தம் போல நீ கண்ணில் சிக்கினாய் மறுபடி நீ மறுபடி நீ
Song information
Singers: Yuvan Shankar Raja and Siddharth
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Madhan Karky
Release information: From Yezhu Kadal Yezhu Malai (2024) · Singer: Yuvan Shankar Raja and Siddharth · Lyricist: Madhan Karky · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Siddharth
- Film / album: Yezhu Kadal Yezhu Malai
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Madhan Karky