Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : T. M. Soundararajan Lyrics by : Vaali Male Part Maappillai sirkku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Maadaai uzhaippathu un bharam Adhai lesaai ninaippathu samsaaram Male Part Maappillai sirkku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Female Part Mangala pennukku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Veettai kaappathu pen paadu Idhai kaattilumaa intha aanpaadu…. Female Part Mangala pennukku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Male Part Yaenadi pennae thaamarai kannae Ennidam intha veeraappu Kaalaiyar seiyyum kaariyam yaavum Kaniyar seithaal pollaappu Male Part Pennmai poovin jaathi endraanathu Menmai maari ponaal ennaavathu nee Pani vizhi mayangida kani mozhi pazhagidum Kili mozhiyinam ena puriyaatho… Male Part Maappillai sirkku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Female Part Paavaiyar endraal kevalam endru
Pottikku vanthaal vaarungal Paavaiyar endraal kevalam endru Pottikku vanthaal vaarungal Aduppadi poona jeyippathu aanai Nadappathai mudivil paarungal Female Part Deivam meniyil paathi pen kondathu Ungal sakthi yaavum yaar thanthathu Intha paramparai kathaigalai purinthavar therinthavar Vambukkum thumbukkum varalaamo Female Part Mangala pennukku vaazhththukkal Sila manimozhi solvaen kettukko Male Part Beemanum nalanum pengalai polae Samaiyal seithu pereduththaar Senaiyum nadaththi paanaiyum piththa Jaathikku iniyo penn kulaththaar Female Part Mangai kannil undu vel enbathu Veeram illai endru yaar sonnathu Male Part Idhil unakkulla perumaiyum Enakkulla thiramaiyum Avaravar manathukku theriyaatho Female Part Idhai varugindra kalangal Mudivurai vazhangattum Poovaiyar menmaigal puriyaatho Male Part Theriyaatho….. Female : Puriyaatho… Male : Theriyaatho…..oo…… Female : Puriyaatho…oo……
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. எம். சௌந்தரராஜன் பாடலாசிரியர் : வாலி ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ மாடாய் உழைப்பது உன் பாரம் அதை லேசாய் நினைப்பது சம்சாரம்...... ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ வீட்டைக் காப்பது பெண் பாடு இதை காட்டிலுமா இந்த ஆண் பாடு.... பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ ஆண் : ஏனடி பெண்ணே தாமரைக் கண்ணே என்னிடம் இந்த வீராப்பு காளையர் செய்யும் காரியம் யாவும் கன்னியர் செய்தால் பொல்லாப்பு ஆண் : பெண்மை பூவின் ஜாதி என்றானது மென்மை மாறிப் போனால் என்னாவது நீ பனி விழி மயங்கிட கனி மொழி பழகிடும் கிளி மொழியினம் என புரியாதோ.... ஆண் : மாப்பிள்ளை சாருக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ பெண் : பாவையர் என்றால் கேவலம் என்று போட்டிக்கு வந்தால் வாருங்கள் பாவையர் என்றால் கேவலம் என்று போட்டிக்கு வந்தால் வாருங்கள் அடுப்படி பூனை ஜெயிப்பது ஆணை நடப்பதை முடிவில் பாருங்கள் பெண் : தெய்வம் மேனியில் பாதி பெண் கொண்டது உங்கள் சக்தி யாவும் யார் தந்தது இந்த பரம்பரை கதைகளை புரிந்தவர் தெரிந்தவர் வம்புக்கும் தும்புக்கும் வரலாமோ..... பெண் : மங்கலப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் சில மணிமொழி சொல்வேன் கேட்டுக்கோ ஆண் : பீமனும் நளனும் பெண்களைப் போலே சமையல் செய்து பேரெடுத்தார் சேனையும் நடத்தி பானையும் பிடித்த ஜாதிக்கு இணையோ பெண் குலத்தார் பெண் : மங்கை கண்ணில் உண்டு வேல் என்பது வீரம் இல்லை என்று யார் சொன்னது ஆண் : இதில் உனக்குள்ள பெருமையும் எனக்குள்ள திறமையும் அவரவர் மனதுக்கு தெரியாதோ.... பெண் : இதை வருகின்ற காலங்கள் முடிவுரை வழங்கட்டும் பூவையர் மேன்மைகள் புரியாதோ ஆண் : தெரியாதோ........ பெண் : புரியாதோ..... ஆண் : தெரியாதோ.....ஓ.... பெண் : புரியாதோ.....ஓ....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: T. M. Soundararajan
Lyrics by: Vaali
Release information: From Balaparitchai (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: T. M. Soundararajan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Balaparitchai
- Composer: T. M. Soundararajan
- Lyricist: Vaali