Roman script
Singer : C. S. Jayaraman Music by : K. H. Reddy Lyrics by : Kannadasan Male Part Mannir pirandhan Mannuzhudhu pon padaithaan Than idathai izhandhavanaai Thaniyidathae thalai saaithaan Male Part Thanporulai thaan thirudi Thalai pizhaikka thaavugindraan Vaazhugindra kaalam ellaam Maganukkae vaazhndhirundhaan Male Part Vazhi payanam mudindha pinnum Magan vaazha thunai purindhaan Male Part Panbu izhandhaan ven jiraiyil Pachai mayil vaadugindraal Pennedutha perunthalaivan Pirindhu vitta nilai ariyaal Theeyutta selgindra peran kanduvittaan Neeyutti valarpadharkku naanundu Unaiyutti valargindra oruvar pirindhu vittaan Male Part Paarendraan thandhai paarthaan Manam padhaithaan Yaar sadalam pettravana Ammammaa innilaiyaa Seer koduthaan mugam paarka thirumbinaan Male Part Paarvaiyilum thalai paarkka mudiyavillai Kaal paarthaan kan pudhaithu neer vadithaan Kalanginaan mudividathil Mannai valarthavanae mannukkae uramanaan Mannukkae uramanaan
தமிழ்
பாடகர் : சி . எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மண்ணிற் பிறந்தான் மண்ணுழுது பொன் படைத்தான் தன் இடத்தை இழந்தவனாய் தனியிடத்தே தலை சாய்த்தான்...... ஆண் : தன் பொருளைத் தான் திருடித் தலை பிழைக்கத் தாவுகின்றான் வாழுகின்ற காலமெல்லாம் மகனுக்கே வாழ்ந்திருந்தான்..... ஆண் : வழிப் பயணம் முடிந்த பின்னும் மகன் வாழத் துணை புரிந்தான் ஆண் : பணமிழந்தான் வெஞ்சிறையில் பச்சை மயில் வாடுகின்றாள் பெண்ணெடுத்த பெருந்தலைவன் பிரிந்து விட்ட நிலையறிந்தான் தீயூட்டச் செல்கின்ற பேரன் கண்டுவிட்டான் நீயூட்டி வளர்ப்பதற்கு நானுண்டு..... உனையூட்டி வளர்க்கின்ற ஒருவன் பிரிந்து விட்டான் ஆண் : பாரென்றான் தந்தை பார்த்தான் மனம் பதைத்தான் யார் சடலம் பெற்றவனா அம்மம்மா இந்நிலையா சீர் கொடுத்தாள் முகம் பார்க்கத் திரும்பினான் ஆண் : பார்வையிலும் தலை பார்க்க முடியவில்லை கால் பார்த்தான் கண் புதைத்து நீர் வடித்தான் கலங்கினான் முடிவிடத்தில் மண்ணை வளர்த்தவனே மண்ணுக்கே உரமானான்..... மண்ணுக்கே உரமானான்...
Song information
Singer: C. S. Jayaraman
Music by: K. H. Reddy
Lyrics by: Kannadasan
Release information: From Ponnu Vilaiyum Boomi (1959) · Singer: C. S. Jayaraman · Lyricist: Kannadasan · Music: K. H. Reddy
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Ponnu Vilaiyum Boomi
- Composer: K. H. Reddy
- Lyricist: Kannadasan