Roman script

Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female Part

Haaa….aaa…..haaa….aaa……aaa….aa…

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Vaanaga tharagai irangi vandhen

Vaalvizhi maenagai mayangi nindren

Maalaiyil maiyalil ilamanam isaithathu

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Female Part

Vizhigal irandum thuyilavillai

Viraga thaabam thaniyavillai

Iniyum thaanga valimai illai

Arul tharum thiru ulam

Adaikalam kodukkumoo

Uyirai urukkida

Female Part

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Female Part

Iyarkkai thandha uravugalai

Ilamai thandha kanavugalai

Iyarkkai thandha uravugalai

Ilamai thandha kanavugalai

Thadukka enna urimaigalo

Thavathil enna perumaigaloo

Female Part

Mazhai mugil thanal pozhiya

Vizhigalil punal vadiya

Nilavennum thugil avizha

Kalaviyal manam negizha

Female Part

Paruva maeni viraga velvi

Puriyum bothu padhavi yedhu

Female Part

Sevvari odiya kangalil

Anjanam karainthida

Female Part

Seiyilai kaigalil maeviya

Kaivalai kazhandrida

Female Part

Malararanaiyil madhan kanaiyil

Udal vizhunthathu adhil ezhunthathu

Female Part

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

Vaanaga tharagai irangi vandhen

Vaalvizhi maenagai mayangi nindren

Maalaiyil maiyalil ilamanam isaithathu

Manmadha raagangalae

Saba mannavar kelungalaen

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா....ஆ......ஹா.....ஆஅ.....

மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

வானகத் தாரகை இறங்கி வந்தேன்

வாள்விழி மேனகை மயங்கி நின்றேன்

மாலையில் மையலில் இளமனம் இசைத்தது

மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

பெண் : விழிகள் இரண்டும் துயிலவில்லை

விரக தாபம் தணியவில்லை

இனியும் தாங்க வலிமை இல்லை

அருள் தரும் திருவுள்ளம்

அடைக்கலம் கொடுக்குமோ

உயிரை உருக்கிட............

பெண் : மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

பெண் : இயற்கை தந்த உறவுகளை

இளமை தந்த கனவுகளை

இயற்கை தந்த உறவுகளை

இளமை தந்த கனவுகளை

தடுக்க என்ன உரிமைகளோ

தவத்தில் என்ன பெருமைகளோ

பெண் : மழை முகில் தணல் பொழிய

விழிகளில் புனல் வடிய

நிலவென்னும் துகில் அவிழ

கலவியில் மனம் நெகிழ

பெண் : பருவ மேனி விரக வேள்வி

புரியும் போது பதவி ஏது

பெண் : செவ்வரி ஓடிய கண்களில்

அஞ்சனம் கரைந்திட

பெண் : சேயிழை கைகளில் மேவிய

கைவளை கழன்றிட

பெண் : மலரணையில் மதன் கணையில்

உடல் விழுந்தது அதில் எழுந்தது

பெண் : மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

வானகத் தாரகை இறங்கி வந்தேன்

வாள்விழி மேனகை மயங்கி நின்றேன்

மாலையில் மையலில் இளமனம் இசைத்தது

மன்மத ராகங்களே சபா மன்னவர் கேளுங்களேன்

Song information

Singer: Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Balanagamma (1981) · Singer: Vani Jayaram · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song