Roman script
Singer : Vani Jayaram Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Mangala kannagi kunguma janaki Nalangal thulanga vilanga aniyum thaaliyaa Nadaga kaviya kaveri madhavi Mayangi kulungi arangil aniyum salangaiya Thaaliyaa..salangaiyaa Thaaliyaa..salangaiyaa Female Part Manamagal ival enum deiva bandhama Female Part Vilaimagal ival enum dhinasari sondhama Manamagal ival enum deiva bandhama Vilaimagal ival enum dhinasari sondhama Thaalikkum medai salangaikkum medai Irandil edhu nerumo Thalaivan oruvan valangum bandham serumo Thaaliyaa..salangaiyaa Thaaliyaa..salangaiyaa Female Part Sathiyam thathuvam pongum vaazhkaiya Nithiyam methaiyil konjum vaazhkkaiya Sathiyam thathuvam pongum vaazhkaiya Nithiyam methaiyil konjum vaazhkkaiya Kalaimagal endrae marumagalaagum Punidha nilai serumo Thagatheem thagatheem enavae aada nerumo Female Part Mangala kannagi kunguma janaki Nalangal thulanga vilanga aniyum thaaliyaa Nadaga kaviya kaveri madhavi Mayangi kulungi arangil aniyum salangaiya Female Part Ilamai maeni idhu perumaiyodu Kollum malargalo Sabai yeri aadi nenjai Soorai aadum iru vizhigalo Female Part Oru ullam thannil thannai Alli veikkum uyar angamo Malar palli meedhu seiyum Kalla kaadhal tharum sangamo Female Part Kadhalum ennai marukkumo Vedhamum ennai verukkumo Nadhamae ennai anaikkumo Nallavan ullam manakkumo Female Part Kalaiyo enna nilaiyoo Poruloo iraivan aruloo….
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. வி . மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மங்கல கண்ணகி குங்கும ஜானகி நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா நாடக காவிய காவிரி மாதவி மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா தாலியா.........சலங்கையா........ தாலியா.........சலங்கையா........ பெண் : மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா பெண் : விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா தாலிக்கும் மேடை சலங்கைக்கும் மேடை இரண்டில் எது நேருமோ தலைவன் ஒருவன் வழங்கும் பந்தம் சேருமோ தாலியா..........சலங்கையா....... தாலியா.........சலங்கையா.......... பெண் : சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா கலைமகள் என்றே மருமகளாகும் புனித நிலை சேருமோ தகதீம் தகதீம் எனவே ஆட நேருமோ பெண் : மங்கல கண்ணகி குங்கும ஜானகி நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா நாடக காவிய காவிரி மாதவி மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா பெண் : இளமை மேனி இது பெருமையோடு கொள்ளும் மலர்களோ சபை ஏறி ஆடி நெஞ்சை சூறை ஆடும் இரு விழிகளோ பெண் : ஒரு உள்ளம் தன்னில் தன்னை அள்ளி வைக்கும் உயர் அங்கமோ மலர் பள்ளி மீது செய்யும் கள்ளக் காதல் தரும் சங்கமோ பெண் : காதலும் என்னை மறுக்குமோ......... வேதமும் என்னை வெறுக்குமோ........ நாதமே என்னை அணைக்குமோ......... நல்லவன் உள்ளம் மணக்குமோ.......... பெண் : கலையோ என்ன நிலையோ பொருளோ இறைவன் அருளோ..........!
Song information
Singer: Vani Jayaram
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Thaaliya Salangaiya (1977) · Singer: Vani Jayaram · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Thaaliya Salangaiya
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan