Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Viswanathan Female Part Malligai en mannan mayangum Ponnaana malar allavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo Ennaeramum un aasai pol Pen paavai naan poo choodi kollavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo Female Part Vaan megangal velli oonjal pol Vaan megangal velli oonjal pol Thingal maeniyai thottu thaalaattudhu Kulir kaatrilae thalir poongkodi Konji pesiyae anbai paaraattudhu Female Part En kannan thunjathaan En nenjam manjam dhaan Kaiyodu naan allavo En devanae un devi naan Ivvaelaiyil un thaevai ennavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo Female Part Pon maangalyam vanna poocharam Pon maangalyam vanna poocharam Manjal kungumam endrum nee thandhadhu Or aayiram inba kaaviyam Undhan kangalil alli naan thandhadhu Female Part Nam illam sorgam dhaan Nam ullam vellam dhaan Ondrodu ondraanadhu En sondhamum indha bandhamum Unnodudhaan naan thaedi kondadhu Female Part Malligai en mannan mayangum Ponnaana malar allavo Ennaeramum un aasai pol Pen paavai naan poo choodi kollavo Malligai en mannan mayangum Ponnaana malar allavo
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பெண் : வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல் திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது பெண் : என் கண்ணன் துஞ்சத்தான் என் நெஞ்சம் மஞ்சம்தான் கையோடு நான் அல்லவோ என் தேவனே உன் தேவி நான் இவ்வேளையில் உன் தேவை என்னவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பெண் : பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம் பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம் மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது ஓராயிரம் இன்ப காவியம் உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது பெண் : நம் இல்லம் சொர்க்கம்தான் நம் உள்ளம் வெல்லம்தான் ஒன்றோடு ஒன்றானது என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது பெண் : மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என் நேரமும் உன் ஆசை போல் பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Viswanathan
Release information: From Dheerga Sumangali (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Dheerga Sumangali
- Composer: M. S. Viswanathan