Roman script

Singer : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Malaigalil megangal raagangal paadum

Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum

Female : Vaanmugil pondraval naan

Male : Unnai vaangidum bhoomiyum naanthaan kannae

Female Part

Malaigalil megangal raagangal paadum

Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum

Male Part

Ilang kadhal kili jodi edhirkaala isai paadi

Inbathai santhikattum

Female : Aaaaa…..eeraezhu ulagangal illaathaa bogangal

Ennendru sinthikattum

Male Part

Odam idhu odum intha odaithanilae

Female : Naanam vidai koorum antha velaithanilae

Male : Odam idhu odum intha odaithanilae

Female : Naanam vidai koorum antha velaithanilae

Male : Valaikkaram valaikkayilae

Valaikkaram valaikkayilae

Female : Vaaliba naadagam kaanbom kannaa

Male Part

Malaigalil megangal raagangal paadum

Female : Mazhaithuli mann meethu vanthaaga vendum

Male Part

Vaikaasi nilavae nee kai veesi nadai podu

Sorkaththin pakkathilae

Female : Aaaaa……maan vaiththa kannodu

Mai vaiththa pen ennai

Konjattum vetkaththilae

Male Part

Naalai manamaalai iru tholai thazhuvum

Female : Mogam enum raagam iru thegam pazhagum

Male : Naalai manamaalai iru tholai thazhuvum

Female : Aaaa….mogam enum raagam iru thegam pazhagum

Male : Mani vizhi mayangidumo

Mani vizhi mayangidumo

Female : Manthira poojaigal adhuthaan kannaa

Female Part

Malaigalil megangal raagangal paadum

Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum

Female : Vaanmugil pondraval naan

Male : Unnai vaangidum bhoomiyum naanthaan kannae

Both : Hehmmmhmm hmm mm

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

பெண் : வான்முகில் போன்றவள் நான்

ஆண் : உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே

பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

ஆண் : இளங்காதல் கிளி ஜோடி எதிர்கால இசை பாடி

இன்பத்தை சந்திக்கட்டும்...

பெண் : ஆஆஆ......ஈரேழு உலகங்கள் இல்லாத போகங்கள்

என்னென்று சிந்திக்கட்டும்

ஆண் : ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே

பெண் : நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே

ஆண் : ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே

பெண் : நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே

ஆண் : வளைக்கரம் வளைக்கையிலே.........

வளைக்கரம் வளைக்கையிலே.........

பெண் : வாலிப நாடகம் காண்போம் கண்ணா

ஆண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

பெண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

ஆண் : வைகாசி நிலவே நீ கை வீசி நடை போடு

சொர்க்கத்தின் பக்கத்திலே.....

பெண் : ஆஆஆ.......மான் வைத்த கண்ணோடு

மை வைத்த பெண் என்னை

கொஞ்சட்டும் வெட்கத்திலே

ஆண் : நாளை மணமாலை இரு தோளை தழுவும்

பெண் : மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்

ஆண் : நாளை மணமாலை இரு தோளை தழுவும்

பெண் : ஆஆ.....மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும்

ஆண் : மணி விழி மயங்கிடுமோ........

மணி விழி மயங்கிடுமோ........

பெண் : மந்திர பூஜைகள் அதுதான் கண்ணா.....

பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும்

ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்

பெண் : வான்முகில் போன்றவள் நான்

ஆண் : உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே

இருவர் : ஹீஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

Song information

Singer: T. M. Soundararajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Kanavan Manaivi (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song