Roman script

Singer : Vani Jayaram

Music by : Ben Surendar

Female Part

Maakaali madhuneeli

Ongaari thirisooli

Female Part

Koduthaai enna ninaithaai

Pillai pirithaai aangaari

Female Part

Paarpaai pillai ezhundhae vara

Kadaikann arul maari

Female Part

Enaipaar ini enakkaar thunai

En saei uuyir thaa nee

Enaipaar ini enakkaar thunai

En saei uuyir thaa nee

Sirumaavadu vizhithae ezha olithaa devi

Female Part

Konji kulaviya pinju magal thanai

Nanju kondu pomo

Vanjanai ennidam vaithathennadi

Ranjitha komala maari

Female Part

Venjinam pokkidu nanjinai neekkidu

Nal vazhi kaatitidu thaayae

Female Part

Vaendinen unnai vaendinen

En pillai uyir thara vaendinen oo oo oo

Vaendinen unnai vaendinen

En pillai uyir thara vaendinen

Uyir thara vaendinen

Uyir thara vaendinen

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்

பெண் : மாகாளி மதுநீலி

ஓங்காரி திரிசூலி

பெண் : கொடுத்தாய் என்ன நினைத்தாய்

பிள்ளை பறித்தாய் ஆங்காரி

பெண் : பார்ப்பாய் பிள்ளை எழுந்தே வர

கடைக்கண் அருள் மாரி

பெண் : எனைப்பார் இனி எனக்கார் துணை

என் சேய் உயிர் தா நீ

எனைப்பார் இனி எனக்கார் துணை

என் சேய் உயிர் தா நீ

சிறுமாவடு விழித்தே எழ ஒளித்தா தேவி

பெண் : கொஞ்சி குலவிய பிஞ்சு மகள் தனை

நஞ்சு கொண்டு போமோ

வஞ்சனை என்னிடம் வைத்ததென்னடி

ரஞ்சித கோமள மாரி

பெண் : வெஞ்சினம் போக்கிடு நஞ்சினை நீக்கிடு

நல்வழி காட்டிடு வாயே

பெண் : வேண்டினேன் உன்னை வேண்டினேன்

என் பிள்ளை உயிர் தர வேண்டினேன் ஓஓஒ

வேண்டினேன் உன்னை வேண்டினேன்

என் பிள்ளை உயிர் தர வேண்டினேன்

உயிர் தர வேண்டினேன்

உயிர் தர வேண்டினேன்....

Song information

Singer: Vani Jayaram

Music by: Ben Surendar

Release information: From Sarvam Sakthi Mayam (1986) · Lyricist: Vaali

Explore this song