Roman script
Singers : Rajinikanth, Haricharan and V. Uma Shankar Music by : A. R. Rahman Male Part Ethirigalai ozhikka Ethanaiyo vazhigal undu Mudhal vazhi mannippu (Dialogue) Male Part Unmai uruvaai nee Ulagin guruvaai nee Emmun varuvaai nee En mozhi arulvaai nee Chorus Un maarbodu Kaayangal ooraayiram Un vaazhvodu Gnyanangal nooraayiram Chorus Thaai mannodu Unnaalae maatram varum Ini unnodu unnodu Dhesam varum Male Part Maattram ondruthaan Maaraathathu Male Part Maaru Maattram ondruthaan Maaraathathu Maaruvathellam uyirodu Maarathathellam mannodu (Dialogue) Male Part Porumai kol Thaneerai kooda Salladaiyl allalaam Athu panikatti aagum varai Poruthirunthaal (Dialogue) Male Part Panathaal santhosathai Vaadagaiku vaangalam Vilaikku vaanga mudiyaathu (Dialogue) Male Part Pagaivanin Pagayai vida Nanbanin pagaiyae Aabathaanathu (Dialogue) Male Part Sooryanukku mun Ezhunthu kol Sooriyanaiyae jeipaai (Dialogue) Male Part Nee enbathu udala Uyira… peyara….
Moondrum illai seyal… (Dialogue) Male Part Udala uyira Peyara nee Moondrum illai Seyalae nee Male Part Vithiyai amaipathu Iraivan kaiyil Antha vithiyai mudipathu Undhan kaiyil Chorus Un villodu villodu Veeram kodu Un sollodu sollodu Maatram kodu Male Part Maattram ondruthaan Maarathathu Male Part Nee pogalaam Enbavan yejamaan Vaa pogalaam Enbavan thalaivan Nee yejamaana thalaivana (Dialogue) Male Part Nee ottam pidithaal Thunbam unnai thorathum Ethirthu nil Thurathiya thunbam ottam pidikkum (Dialogue) Male Part Petrorgal amaivathu vidhi Nanbargalai amaipathu madhi (Dialogue) Male Part Sinathai adakku Kobathodu ezhugiravan Nashtathodu utkarugiran Nanba ellam konjam kaalam (Dialogue) Chorus Unn maarbodu Kaayangal ooraayiram Unn vaazhvodu Gnyanangal nooraayiram Chorus Thaai mannodu Unnaalae maattram varum Ini unnodu unnodu Dhesam varum…….. Male Part Maattram ondruthaan Maarathathu Male Part ………………………………. Female : Oooo…ooo…ooo..
தமிழ்
பாடகர்கள் : ரஜினிகாந்த், ஹரிச்சரன், வி. உமா சங்கர் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு முதல் வழி மன்னிப்பு ஆண் : உண்மை உருவாய் நீ உலகின் குருவாய் நீ எம்முன் வருவாய் நீ என்மொழி அருள்வாய் நீ குழு : உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம் குழு : தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும் இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும் ஆண் : மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஆண் : மாறு மாற்றம் ஒன்றுதான் மாறாதது மாறுவதெல்லாம் உயிரோடு மாறாத தெல்லாம் மண்ணோடு ஆண் : பொறுமை கொள் தண்ணீரைக் கூடச் சல்லடையில் அள்ளலாம் அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் ஆண் : பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் விலைக்கு வாங்க முடியாது ஆண் : பகைவனின் பகையை விட நண்பனின் பகையே ஆபத்தானது ஆண் : சூரியனுக்கு முன் எழுந்து கொள் சூரியனையே ஜெயிப்பாய் ஆண் : நீ என்பது உடலா உயிரா பெயரா மூன்றும் இல்லை செயல் ஆண் : உடலா உயிரா பெயரா நீ மூன்றும் இல்லை செயலே நீ ஆண் : விதியை அமைப்பது இறைவன் கையில் அந்த விதியை முடிப்பது உந்தன் கையில் குழு : உன் வில்லோடு வில்லோடு வீரம் கொடு உன் சொல்லோடு சொல்லோடு மாற்றம் கொடு ஆண் : மாற்றம் ஒன்று தான் மாறாதது ஆண் : நீ போகலாம் என்பவன் எஜமான் வா போகலாம் என்பவன் தலைவன் நீ எஜமானா தலைவனா ஆண் : நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னைத் துரத்தும் எதிர்த்து நில் துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும் ஆண் : பெற்றோர்கள் அமைவது விதி நண்பர்களை அமைப்பது மதி ஆண் : சினத்தை அடக்கு கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருகிறான் நண்பா எல்லாம் கொஞ்ச காலம் குழு : உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் உன் வாழ்வோடு ஞானங்கள் நூறாயிரம் குழு : தாய் மண்ணோடு உன்னாலே மாற்றம் வரும் இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும் ஆண் : மாற்றம் ஒன்றுதான் மாறாதது ஆண் : ............................ பெண் : ஓஓ ஓஓ ஓஓ
Song information
Singers: Rajinikanth, Haricharan and V. Uma Shankar
Music by: A. R. Rahman
Release information: From Kochadaiiyaan (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Rajinikanth
- Singer: Haricharan and V. Uma Shankar
- Film / album: Kochadaiiyaan
- Composer: A. R. Rahman