Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : R. Parthasarathi Female Part Kizhakku veluthadhadi Keezh vaanam sivandhadhadi Kadhiravan varavu kandu Kamala mugam malarndhadhadi Engal kudumbam indru Yereduthu nadandhadhadi Indru vandha thendralukku Idhayamellaam thirandhadhadi Female Part Kizhakku veluthadhadi Keezh vaanam sivandhadhadi Kadhiravan varavu kandu Kamala mugam malarndhadhadi Female Part Odiya maegam indru Mazhaiyaaga pozhindhadhadi Ooraarkku kidaikkum endru Ooraniyil vizhindhadhadi Kaadu sendra maada puraa Veedu vandhu saerndhadhadi Veedu vandha magizhchiyilae Vizhaa kolam kondadhadi Female Part Kizhakku veluthadhadi Keezh vaanam sivandhadhadi Kadhiravan varavu kandu Kamala mugam malarndhadhadi Male Part Vaanamae vaiyamae Nee thandha valamellaam Maanidar urimaiyammaa Naan endru solvadhai Naam endru solvadhaal Naadellaam vaazhumammaa Pozhudhellaam uzhaikkindra Ezhaiyin mugathilae Punnagai valarumammaa Punnagai valarumammaa Male Part Kizhakku veluthadhamma Keezh vaanam sivandhadhamma Kadhiravan varavu kandu Kamala mugam malarndhadhamma Engal kudumbam indru Yaeredutthu nadandhadhammaa Indru vandha thendralukku Idhayamellaam thirandhadhammaa Male Part Kizhakku veluthadhammaa Keezh vaanam sivandhadhammaa… aa… hoi Female Part Nallavrkku nalladhellaam Nadappadhu thaan needhiyadi Illaamal maari vittaal Endha uyir vaazhumadi Pallaandu paadungadi Paravaigal pol aadungadi Padhinaaru peru vaazhvum Varugavendrae koorungadi Male Part Kizhakku veluthadhamma Keezh vaanam sivandhadhamma Kadhiravan varavu kandu Kamala mugam malarndhadhamma
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி பெண் : கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி எங்கள் குடும்பம் இன்று ஏரெடுத்து நடந்ததடி இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் திறந்ததடி பெண் : கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி பெண் : ஓடிய மேகம் இன்று மழையாகப் பொழிந்ததடி ஊரார்க்கு கிடைக்கும் என்று ஊரணியில் விழுந்ததடி காடு சென்ற மாடப் புறா வீடு வந்து சேர்ந்ததடி வீடு வந்த மகிழ்ச்சியிலே விழாக் கோலம் கொண்டதடி பெண் : கிழக்கு வெளுத்ததடி கீழ் வானம் சிவந்ததடி கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததடி ஆண் : வானமே வையமே நீ தந்த வளமெல்லாம் மானிடர் உரிமையம்மா நான் என்று சொல்வதை நாம் என்று சொல்வதால் நாடெல்லாம் வாழுமம்மா பொழுதெல்லாம் உழைக்கின்ற ஏழையின் முகத்திலே புன்னகை வளருமம்மா புன்னகை வளருமம்மா ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததம்மா எங்கள் குடும்பம் இன்று ஏரெடுத்து நடந்ததம்மா இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம் திறந்ததம்மா ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா... ஆ... ஹோய் பெண் : நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடப்பதுதான் நீதியடி இல்லாமல் மாறி விட்டால் எந்த உயிர் வாழுமடி பல்லாண்டு பாடுங்கடி பறவைகள் போல் ஆடுங்கடி பதினாறு பெரு வாழ்வும் வருகவென்றே கூறுங்கடி ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா கீழ் வானம் சிவந்ததம்மா கதிரவன் வரவு கண்டு கமல முகம் மலர்ந்ததம்மா
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: R. Parthasarathi
Release information: From Avan Pithana (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Avan Pithana
- Composer: R. Parthasarathi