Roman script
Singers : Prabhu and Sreeja Music by : A. R. Rahman Female Part Kavithaikku porul thandha Kalaivaani neeyaa En kanavodu ketkindra Kaarsalangai neeyaa Pechukku uyir thandha Sapthangal neeyaa Ennai pesaamal seigindra Mounangal neeyaa Female Part Saththangal illaadha Sangeetham neeyaa Ennai saagaamal seigindra Sanjeevi neeyaa Paruvathin thottathil Mudhal poovum neeyaa En paalaivanam kaangindra Mudhal mazhaiyum neeyaa Male Part Iravodu naan kaanum Oli vattam needhaan En iru kannil therigindra Oru kaatchi needhaan Male Part Vaarthaikkul oodaadum Ul artham needhaan En vaadhiyathil isaiyaagum Uyir moochum needhaan Male Part Thoorathil mayil iragaal Thottavalum needhaan En pakkathil agniyaai Suttavalum needhaan Male Part Kaadhalukku kan thirandhu Vaiththavalum needhaan Naan kaadhaliththaal Kan moodi kondavalum needhaan
தமிழ்
பாடகர்கள் : பிரபு மற்றும் ஸ்ரீஜா இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் பெண் : கவிதைக்கு பொருள் தந்த கலைவாணி நீயா என் கனவோடு கேட்கின்ற காற்சலங்கை நீயா பேச்சுக்கு உயிர் தந்த சப்தங்கள் நீயா எனை பேசாமல் செய்கின்ற மௌனங்கள் நீயா பெண் : சத்தங்கள் இல்லாத சங்கீதம் நீயா எனை சாகாமல் செய்கின்ற சஞ்சீவி நீயா பருவத்தின் தோட்டத்தில் முதற்பூவும் நீயா என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீயா ஆண் : இரவோடு நான் காணும் ஒளிவட்டம் நீதான் என் இருகண்ணில் தெரிகின்ற ஒரு காட்சி நீதான் ஆண் : வார்த்தைக்குள் ஊடாடும் உள் அர்த்தம் நீதான் என் வாத்தியத்தில் இசையாகும் உயிர்மூச்சும் நீதான் ஆண் : தூரத்தில் மயிலிறகால் தொட்டவளும் நீதான் என் பக்கத்தில் அக்கினியாய்ச் சுட்டவளும் நீதான் ஆண் : காதலுக்கு கண்திறந்து வைத்தவளும் நீதான் நான் காதலித்தால் கண்மூடிக் கொண்டவளும் நீதான்
Song information
Singers: Prabhu and Sreeja
Music by: A. R. Rahman
Release information: From Duet (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Prabhu and Sreeja
- Film / album: Duet
- Composer: A. R. Rahman