தமிழ்

ஆண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
காதல் முகம்
கண்டுகொண்டேன்
ஆண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
காதல் முகம்
கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு
கண்டுகொண்டேன்
ஆண் : வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி
பெண் : என் கண் பார்த்தது
என் கை சேருமோ
ஆண் : கை சேராமலே
கண்ணீர் சேருமோ
பெண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
காதல் முகம்
கண்டுகொண்டேன்
ஆண் : மலர்மஞ்சம்
விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா
பெண் : உயிர் மிஞ்சும்
இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா
ஆண் : உன் தனிமைக்
கதவின் தாள் நீக்கவா
பெண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
காதல் முகம்
கண்டுகொண்டேன்
பெண் : மேகம் திறந்தால்
அதற்குள் உன்
முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன்
குரல் கேட்கிறேன்
ஆண் : கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்
பெண் : உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ
ஆண் : ஏ கனவு மங்கையே
உனது மனது எனது
மனதில் இணையுமோ
பெண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் ஹே ஹேய்
காதல் முகம்
கண்டுகொண்டேன் ஹே ஹேய்
ஆண் : விரல் தொடும்
தூரத்திலே ஹே ஹேய்
வெண்ணிலவு
கண்டுகொண்டேன்
ஆண் : நதியின் தேடல்
கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல்
கடைசியில் உனைக் காண்பது
பெண் : கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்
ஆண் : நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்
பெண் : ஏ காதல் தேவனே
எனது இமையில்
உனது விழிகள் மூடுவேன்
ஆண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
பெண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம்
கண்டுகொண்டேன்
பெண் : காதல் முகம்
கண்டுகொண்டேன்
ஆண் : விரல் தொடும் தூரத்திலே
பெண் : விரல் தொடும் தூரத்திலே
ஆண் : வெண்ணிலவு
கண்டுகொண்டேன்
பெண் : கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம்
கண்டுகொண்டேன்

Song details

படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)

பாடியவர்கள்: ஹரிஹரன் & மகாலட்சுமி ஐயர்

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர்: வைரமுத்து

Album: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Song video

Watch on YouTube