Roman script
Singers : L. R. Eswari and Seerkazhi Govindarajan Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Male Part Engal tamil annai Ethanaiyo thavamirunthu Thingalaai sengthiraai Thirunaattin oli vilakkaai Valluvan kural pola vadivamo sirithaaga Ulamo intha ulaginum perithaaga Female Part Kanjiyilae oru puththan piranthaan Konda karunaiyinaal engal nenjil nirainthaan Male Part Annaavendrae ellorum azhaikka vanthaar Aayiram thalaimurai thazhaikka vanthaar Male Part Annaa annaa annaa Engal anbin deivam annaa Male Part Edhaiyum thaangum idhayam kondu thannai Edhirppavar meethu karunai kondu Vaithavar yaavarum vaazhattum endru Vaazhththiya idhyam adhuvallavaa Female and Male : Adhu valluvan kaattiya vazhiyallavaa Female Part Maattraan thottathu malligaikkum Nalla manamundu endrae solliyavar Kadamai kanniyam kattupaaduthaan Thaaraga manthiram aakkiyavar Female and Male : Nam thozhvugal ellaam pokkiyavar Male Part Annaa annaa annaa
Engal anbin deivam annaa Female Part Yaezhaigal siriththida arasamaiththaar Adhil iraivanai kaanbom ena uraiththaar Erinthidum kudisaiyil varunthiduvoorkku Area veedugal amaithaliththaar Female and Male : Angu eriyum vilakkaai avar irunthaar Female Part Chennai endroru peyar maattri Adhai senthamizh naadena peyar sootti Male : Bharathi paadiya painthamizh naattai Paarinil meendum kaattiyavar Nam pazhigal anaiththaiyum maattriyavar Male Part Ellorkkum annanavan Illaarkku selvamavan Female : Nallorgal ullamellaam Naalthorum aalupavan Male Part Sonnaal manam padhaikkum Sollavo vaai padhaikkum Thannath thanimaiyilae Thaanuranga ponaano Female Part Vanga kadal alaiyae Vaai moodi thoongum engal Thanga tamizh maganai Thaalaattu paadinaiyo Male : Paadu nee paadu painthamizhar naadendru Odi uzhaiththa magan urangattum amaithiyilae Odi uzhaiththa magan urangattum amaithiyilae Amaithiyilae Male Part Annaa annaa annaa Engal anbin deivam annaa
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : எங்கள் தமிழ் அன்னை எத்தனையோ தவமிருந்து திங்களாய் செங்கதிராய் திருநாட்டின் ஒளி விளக்காய் வள்ளுவன் குரல் போல வடிவமோ சிறிதாக உளமோ இந்த உலகினும் பெரிதாக..... பெண் : காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான் கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான் ஆண் : அண்ணாவென்றே எல்லோரும் அழைக்க வந்தார் ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தார் ஆண் : அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா..... ஆண் : எதையும் தாங்கும் இதயம் கொண்டு தன்னை எதிர்ப்பவர் மீதும் கருணைக் கொண்டு வைத்தவர் யாவரும் வாழட்டும் என்று வாழ்த்திய இதயம் அதுவல்லவா பெண் மற்றும் ஆண் : அது வள்ளுவன் காட்டிய வழியல்லவா பெண் : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என்றே சொல்லியவர் கடமை கண்ணியம் கட்டுப்பாடுதான் தாரக மந்திரம் ஆக்கியவர் பெண் மற்றும் ஆண் : நம் தாழ்வுகள் எல்லாம் போக்கியவர்....... ஆண் : அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா..... பெண் : மானத்தை காத்திடும் நெசவாளர் அந்த மக்களின் கண்ணீர் தனைப் பார்த்தார் ஆண் : நாடெங்கும் துணிகளை தோள்களில் சுமந்து நலிந்திடும் ஏழைக்கு வாழ்வளித்தார் பெண் மற்றும் ஆண் : மக்கள் நலம் பெறவே ஒரு வழி வகுத்தார்... ஆண் : அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா..... ஆண் : ஏழைகள் சிரித்திட அரசமைத்தார் அதில் இறைவனை காண்போம் என உரைத்தார் எரிந்திடும் குடிசையில் வருந்திடுவோர்க்கு ஏரியா வீடுகள் அமைத்தளித்தார் பெண் மற்றும் ஆண் : அங்கு எரியும் விளக்காய் அவர் இருந்தார்...... பெண் : சென்னை என்றொரு பெயர் மாற்றி அதை செந்தமிழ் நாடென பெயர் சூட்டி ஆண் : பாரதி பாடிய பைந்தமிழ் நாட்டை பாரினில் மீண்டும் காட்டியவர் நம் பழிகள் அனைத்தையும் மாற்றியவர்.... ஆண் : எல்லோர்க்கும் அண்ணனவன் இல்லார்க்கு செல்வமவன் பெண் : நல்லோர்கள் உள்ளமெல்லாம் நாள்தோறும் ஆளுபவன் ஆண் : சொன்னால் மனம் பதைக்கும் சொல்லவோ வாய் பதைக்கும் தன்னந் தனிமையிலே தானுறங்க போனானோ பெண் : வங்கக் கடல் அலையே வாய் மூடி தூங்கும் எங்கள் தங்கத் தமிழ் மகனை தாலாட்டு பாடினையோ ஆண் : பாடு நீ பாடு பைந்தமிழர் நாடென்று ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே..... ஓடி உழைத்த மகன் உறங்கட்டும் அமைதியிலே..... அமைதியிலே..... ஆண் : அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா.....
Song information
Singers: L. R. Eswari and Seerkazhi Govindarajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Manipayal (1973) · Singer: L. R. Eswari and Seerkazhi Govindarajan · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari and Seerkazhi Govindarajan
- Film / album: Manipayal
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan