Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Poovai Sengkuttuvan Male Part Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Ponnoonjal illai poomeththai illai Nee vantha velaiyilae Female Part Ponnoonjal thaanae thaayin manam Poo meththai thaanae thanthai manam Ponnoonjal thaanae thaayin manam Poo meththai thaanae thanthai manam Aaraaro paadum anbaana nenjam Kannae nee thuyilum manjamadaa Manjamadaa…….manjamadaa…… Female Part Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Male Part Chella magal selvamagal Seerodu vaazhntha magal Yaezhaiyudan vanthaaladaa Female Part Sriraaman adithottu Pin sellum seedhaikku Perumaigal veraethadaa Male Part Petha manam piththaaga Bodhai manam kallaaga Petha manam piththaaga Bodhai manam kallaaga Than sontham veruththaaladaa Female Part Thanthai manam thaviththirukka Paramanudan thunai nindra Parvathiyum pennthaanadaa Male Part Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Female : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Male Part Thani maramaai nindravanai Thazhuvugindra poongodiyaal Sugamenna kandaaladaa Female Part Kodiyundu maramundu Kuzhanthaiyenum kaniyundu Kuraiyenna kandaenadaa Male Part Unathannai thuyarthannai Naan theerkkum munnaalae Unathannai thuyarthannai Naan theerkkum munnaalae Un kavalai kondaenadaa Female Part Kannanaaga Neeyirukka Mannanaaga avar irukka Kavalaigal enakkethadaa Male Part Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Female : Kaalam namakku thozhan Kattrum mazhaiyum nanban Aariraariraaro aaraariraariraaro Aaraariraariraaro……
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன் ஆண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பொன்னூஞ்சல் இல்லை பூமெத்தை இல்லை நீ வந்த வேளையிலே பெண் : பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் பூ மெத்தை தானே தந்தை மனம் பொன்னூஞ்சல் தானே தாயின் மனம் பூ மெத்தை தானே தந்தை மனம் ஆராரோ பாடும் அன்பான நெஞ்சம் கண்ணே நீ துயிலும் மஞ்சமடா மஞ்சமடா..........மஞ்சமடா பெண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் ஆண் : செல்ல மகள் செல்வமகள் சீரோடு வாழ்ந்த மகள் ஏழையுடன் வந்தாளடா பெண் : ஸ்ரீராமன் அடிதொட்டு பின் செல்லும் சீதைக்கு பெருமைகள் வேறேதடா ஆண் : பெத்த மனம் பித்தாக பேதை மனம் கல்லாக பெத்த மனம் பித்தாக பேதை மனம் கல்லாக தன் சொந்தம் வெறுத்தாளடா பெண் : தந்தை மனம் தவித்திருக்க பரமனுடன் துணை நின்ற பார்வதியும் பெண்தானடா ஆண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பெண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் ஆண் : தனி மரமாய் நின்றவனை தழுவுகின்ற பூங்கொடியாள் சுகமென்ன கண்டாளடா பெண் : கொடியுண்டு மரமுண்டு குழந்தையெனும் கனியுண்டு குறையென்ன கண்டேனடா ஆண் : உனதன்னை துயர்தன்னை நான் தீர்க்கும் முன்னாலே உனதன்னை துயர்தன்னை நான் தீர்க்கும் முன்னாலே உன் கவலை கொண்டேனடா பெண் : கண்ணனாக நீயிருக்க மன்னனாக அவர் இருக்க கவலைகள் எனக்கேதடா ஆண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் பெண் : காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன் ஆரிராரிராரோ ஆராரிராரிராரோ ஆராரிராரிராரோ....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Poovai Sengkuttuvan
Release information: From Petha manam Pithu (1973) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Poovai Senguttavan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Petha manam Pithu
- Composer: V. Kumar
- Lyricist: Poovai Sengkuttuvan