Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : R. Govardhanam Female Part Ahaahaaha haa… ohohoho ho… Ahaahaa ohoho mhumhum hum… Male Part Kaadhal ennum aatrinilae Kanniyaraam odathilae Kaalamellaam payanam pogum Ulagam andro ammoi Kaathirundhaal ungalukkum Puriyum andro Male Part Kaadhal ennum aatrinilae Kanniyaraam odathilae Kaalamellaam payanam pogum Ulagam andro Male Chorus : Ammaa kaathirundhaal Ungalukkum puriyum andro Female Part Kaadhalenum kalaiyinilae Kai thaerndha kaalaiyarae Kannadithu paaduvadhaal Kaadhal varaadhu Female Chorus : Iyaa kaadhal varaadhu Female Part Panbudanae varum anbinilae thaan Kaadhal undaagum Panbudanae varum anbinilae thaan Kaadhal undaagum Andha paadathai neengal palliyilae thaan Female Chorus : Padippadhu nandraagum Male Part Dhaavaniyodu paavaadai Thalaiyil niraindha poovaadai Paarthadhum padippu varavillai Pallikku sella manamillai Female Part Pattam vittaal kai thattu varum Vaadai pidithaal vambu varum
Kattam potta sattaiyai pottu
Female Chorus : Kambiyai ennum
Kaalam varum
Female Part
Kaadhalenum kalaiyinilae
Kai thaerndha kaalaiyarae
Kannadithu paaduvadhaal
Kaadhal varaadhu
Female Chorus : Panbudanae varum
Anbinilae thaan kaadhal undaagum
Male Part
Parakkudhu parakkudhu pinnaalae
Pachai pudavai thannaalae
Izhukkudhu engalai orathilae
Yaeri varattumaa odathilae
Female Part
Odathil yaerum nerathilae
Udhaiyum kidaikkum kannathilae
Udaindhadhu parkkal muppadhu endru
Female Chorus : Kaalaiyilae varum papperilae
Male Part
Kaadhal ennum aatrinilae
Kanniyaraam odathilae
Kaalamellaam payanam pogum
Ulagam andro
Male Chorus : Ammaa kaathirundhaal
Ungalukkum puriyum andro
Male Chorus : {Salak salak ku sala saiyaa
Salak salak ku sala saiyaa
Male : Ooo….ooo….ooo…ooo….
Female Chorus : Dhinakku dhinakku dhina diya
Ho dhinakku dhinakku dhina diya
Female : Aaa….aaa….aa….aa….} (3)
Male Chorus : {Hoo hoo hoiya
Female Chorus : Hoo hoo hoiya} (2)தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஆர். கோவர்தனம்
பெண் : அஹஹஹா ஹா....ஓஓஒ ஹோ......
ஆஹாஹா ஓஓ ம்ஹும்ஹும் ஹும்
ஆண் : காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
ஆண் : காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ
ஆண் குழு : அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
பெண் : காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது
பெண் குழு : ஐயா காதல் வராது
பெண் : பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
அந்தப் பாடத்தை நீங்கள் பள்ளியிலேதான்
பெண் குழு : படிப்பது நன்றாகும்
ஆண் : தாவணியோடு பாவாடை
தலையில் நிறைந்த பூவாடை
பார்த்ததும் படிப்பு வரவில்லை
பள்ளிக்குச் செல்ல மனமில்லை
பெண் : பட்டம் விட்டால் கைக் தட்டு வரும்
வாடை பிடித்தால் வம்பு வரும்
கட்டம் போட்ட சட்டையைப் போட்டு
பெண் குழு : கம்பியை எண்ணும்
காலம் வரும்
பெண் : காதலெனும் கலையினிலே
கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால்
காதல் வராது
பெண் குழு : பண்புடனே வரும்
அன்பினிலேதான் காதல் உண்டாகும்
ஆண் : பறக்குது பறக்குது பின்னாலே
பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே
ஏறி வரட்டுமா ஓடத்திலே
பெண் : ஓடத்தில் ஏறும் நேரத்திலே
உதையும் கிடைக்கும் கன்னத்திலே
உடைந்தது பற்கள் முப்பது என்று
பெண் குழு : காலையிலே வரும் பேப்பரிலே
ஆண் : காதல் என்னும் ஆற்றினிலே
கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும்
உலகம் அன்றோ
ஆண் குழு : அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும்
புரியும் அன்றோ
ஆண் குழு : {சலக் சலக் கு சல சையா
சலக் சலக் கு சல சையா
ஆண் : ஓஒ....ஓஒ....ஓஒ....ஓஒ.....
பெண் குழு : தினக்கு தினக்கு தின டியா
ஹோ தினக்கு தினக்கு தின டியா
பெண் : ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆஅ....} (3)
ஆண் குழு : {ஹோ ஹோ ஹொய்யா
பெண் குழு : ஹோ ஹோ ஹொய்யா} (2)Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: R. Govardhanam
Release information: From Kairasi (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kairasi
- Composer: R. Govardhanam