தமிழ்

பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண் : காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
பெண் : காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
பெண் : அலை போல நினைவாக
சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
பெண் : எங்கெங்கும் இன்பம்
அது கோலம் போட
என் உள்ள வீணை
ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சில் தாபம்
மேலும் ஏற்றும்
பெண் : காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
பெண் : நில்லென்று சொன்னால் மனம்
நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை
ஓய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தின் தாளம் போடாதோ
வாழும் காலம்
யாவும் எங்கே
நெஞ்சம் தேடும்
பெண் : காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
அலை போல நினைவாக
சில்லென்று வீசும்
மாலை நேர
பெண் : காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே

Song details

படம்: ஜானி (1980)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

பாடியவர்: எஸ். ஜானகி

Album: ஜானி

Song video

Watch on YouTube