Roman script

Singer : Aalaap Raju

Music by : Sathya Dev

Male Part

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa…

Chorus

Ival thaano maargazhi

Ila nenjil pani thuli

Nagaraamal nirkkudhae

Nanaigindra mani thuli

Kadal theendum vaanamaai

En nenjam maarudhae

Alaiyaaga aasaigal aval meedhu modhudhae

Azhagaana raathiri aval koondhal mudiyudhae

Aval paarkkum paarvaiyil adivaanam viduyidhae

Sorgathin thanga chaavi ivalaa

Male Part

Ival thaano maargazhi

Ila nenjil pani thuli

Nagaraamal nirkkudhae

Nanaigindra mani thuli

Male Part

Uyir mazhai thuliyaai

Udal mayiliragaai

Ival ennai thaandi chellum podhu

Midhakkiradhae

Pala janmangalaai ival madiyinilae

Naan vaazhndhirundha nyaabagangal

Udhikkiradhae

Aval nadandhu vara ennai thodarndhu vara

En nenjukkullae naadhaswaram olikkiradhae

Aval kaadhal mugam kandu rasippadharkku

Andha vennilavil jannal ondru thirakkiradhae

Male Part

Kadal theendum …vaanamaai

En nenjam maarudhae

Alaiyaaga aasaigal

Aval meedhu modhudhae

Male Part

Ival paadham thodum

Pasum pulveligal

Pani mutham vaithu mutham vaithu

Silirkkiradhae

Ival viralgal yedhu vanna malargal yedhu

Thendral kuzhappathil nindru nindru

Thigaikkiradhae

Male Part

Oru muyal kuttiyaai indha sella kuttiyai

Kai alli kondu sendru vida thudikkiradhae

Idhu kanavugalaa illai ninaivugalaa

En kannirandil thaen thuligal therikkiradhae

Male Part

Azhagaana raathiri aval koondhal

Mudiyudhae

Aval paarkkum paarvaiyil adivaanam

Vidiyudhae

Male Part

Ival thaano maargazhi

Ila nenjil pani thuli

Nagaraamal nirkkudhae

Nanaigindra mani thuli

Male Part

Kadal theendum vaanamaai

En nenjam maarudhae

Alaiyaaga aasaigal aval meedhu

Modhudhae

Male Part

Azhagaana raathiri aval koondhal

Mudiyudhae

Aval paarkkum paarvaiyil adivaanam

Vidiyudhae

Sorgathin thangha chaavi ivalaa

தமிழ்

பாடகர் : ஆலாப் ராஜு

இசையமைப்பாளர் : சத்யதேவ்

ஆண் : ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ...ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ...ஆ....

ஆ... ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

குழு : இவள் தானோ மார்கழி

இள நெஞ்சில் பனித் துளி

நகராமல் நிற்குதே

நனைகின்ற மணித் துளி

கடல் தீண்டும் வானமாய்

என் நெஞ்சம் மாறுதே

அலையாக ஆசைகள் அவள் மீது மோதுதே

அழகான ராத்திரி அவள் கூந்தல் முடியுதே

அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம் விடியுதே

சொர்க்கத்தின் தங்கச் சாவி இவளா

ஆண் : இவள் தானோ மார்கழி

இள நெஞ்சில் பனித் துளி

நகராமல் நிற்குதே

நனைகின்ற மணித் துளி

ஆண் : உயிர் மழைத் துளியாய்

உடல் மயிலிறகாய்

இவள் என்னை தாண்டி செல்லும் போது

மிதக்கிறதே

பல ஜென்மங்களாய் இவள் மடியினிலே

நான் வாழ்ந்திருந்த ஞாபகங்கள்

உதிக்கிறதே

அவள் நடந்து வர என்னை தொடர்ந்து வர

என் நெஞ்சுக்குள்ளே நாதஸ்வரம் ஒலிக்கிறதே

அவள் காதல் முகம் கண்டு ரசிப்பதற்கு

அந்த வெண்ணிலவில் ஜன்னல் ஒன்று திறக்கிறதே

ஆண் : கடல் தீண்டும் வானமாய்

என் நெஞ்சம் மாறுதே

அலையாக ஆசைகள்

அவள் மீது மோதுதே

ஆண் : இவள் பாதம் தொடும்

பசும் புல்வெளிகள்

பனி முத்தம் வைத்து முத்தம் வைத்து

சிலிர்க்கிறதே

இவள் விரல்கள் எது வண்ண மலர்கள் எது

தென்றல் குழப்பத்தில் நின்று நின்று

திகைக்கிறதே

ஆண் : ஒரு முயல் குட்டியாய் இந்த செல்லக் குட்டியை

கை அள்ளிக் கொண்டு சென்றுவிட துடிக்கிறதே

இது கனவுகளா இல்லை நினைவுகளா

என் கண்ணிரண்டில் தேன் துளிகள் தெறிக்கிறதே

ஆண் : அழகான ராத்திரி அவள் கூந்தல்

முடியுதே

அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம்

விடியுதே

ஆண் : இவள் தானோ மார்கழி

இள நெஞ்சில் பனித் துளி

நகராமல் நிற்குதே

நனைகின்ற மணித் துளி

ஆண் : கடல் தீண்டும் வானமாய்

என் நெஞ்சம் மாறுதே

அலையாக ஆசைகள் அவள் மீது

மோதுதே

ஆண் : அழகான ராத்திரி அவள் கூந்தல்

முடியுதே

அவள் பார்க்கும் பார்வையில் அடிவானம்

விடியுதே

சொர்க்கத்தின் தங்கச் சாவி இவளா

Song information

Singer: Aalaap Raju

Music by: Sathya Dev

Release information: From Marumunai (2014) · Lyricist: Piraisoodan

Explore this song