Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vairamuthu Male Part Hae ye ye Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Male Part Thannai thaanae Malaiyil eriyum Sooriyanai polae Naanae ennai Erindhu kondaen Nachellaik kullae Male Part Malaiyil vizhundha sooriyanai Malaigal thalluvadhillai Allik kolluvaayo Thallich selvaayo Solli chelladi nachellai Male Part Theda sellum Male Part Hae Pattaamboochidhaan kaadhal Kitta chella thathi thaavum Thuratha thuratha dhooram pogum Male Part Hae Chalavaikkaari pol kaadhal Inbathil ennai nanaikkiradhae Thunbathil adithu thuvaikkiradhae Male Part Thanadhu nizhalil Thaan odhungaadha Virutcham polae Enadhu kaadhalil Naan odhungavae idamillaiyae Aiyo kaadhal Amazon kaadu Ullae nuzhaivadhu elidhu Veliyae varuvadhu kadidhu Male Part Hae hae hae Kaathiruppudhaan kaadhal Pipravari muppadhukkaaga Natchathirangalin virpanaikkaaga Male Part Eekkal ponradhu kaadhal Kaniyilum vaayai vaikkiradhae Kaayathin meedhum moikkiradhae Male Part Kaatru veliyin Ozone koorai kizhisal polae Kaadhal kizhitha Idhayam thaikkavae vazhiyillaiyae Aiyo kaadhal Amazon kaadu Ullae nuzhaivadhu elidhu Veliyae varuvadhu kadidhu Male Part Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Irudhalai kolli erumbukku Orudhalaik kaadhal vandhadhae! Male Part Thannai thaanae Malaiyil eriyum Sooriyanai polae Naanae ennai Erindhu kondaen Nachellaik kullae Male Part Malaiyil vizhundha sooriyanai Malaigal thalluvadhillai Allik kolluvaayo Thallich selvaayo Solli chelladi nachellai Male Part Theda sellum
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : ஹே ஏய் ஏய்... இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! ஆண் : தன்னைத் தானே மலையில் எறியும் சூரியனைப் போலே நானே என்னை எறிந்து கொண்டேன் நச்செள்ளைக் குள்ளே ஆண் : மலையில் விழுந்த சூரியனை மலைகள் தள்ளுவதில்லை அள்ளிக் கொள்ளுவாயோ தள்ளிச் செல்வாயோ சொல்லிச் செல்லடி நச்செள்ளை ஆண் : தேட செல்லும் ... ஆண் : ஹே பட்டாம்பூச்சிதான் காதல் கிட்டச் செல்ல தத்தித் தாவும் துரத்தத் துரத்த தூரம் போகும் ஹே ஹே தூரம் போகும் ஆண் : ஹே சலவைக்காரி போல் காதல் இன்பத்தில் என்னை நனைக்கிறதே துன்பத்தில் அடித்துத் துவைக்கிறதே ஆண் : தனது நிழலில் தான் ஒதுங்காத விருட்சம்போலே எனது காதலில் நான் ஒதுங்கவே இடமில்லையே அய்யோ காதல் அமேசான் காடு உள்ளே நுழைவது எளிது வெளியே வருவது கடிது ஆண் : ஹே ஹே ஹே காத்திருப்புதான் காதல் பிப்ரவரி முப்பதுக்காக நட்சத்திரங்களின் விற்பனைக்காக ஆண் : ஈக்கள் போன்றது காதல் கனியிலும் வாயை வைக்கிறதே காயத்தின் மீதும் மொய்க்கிறதே ஆண் : காற்று வெளியின் ஓசோன் கூரைக் கிழிசல் போலே காதல் கிழித்த இதயம் தைக்கவே வழியில்லையே அய்யோ காதல் அமேசான் காடு உள்ளே நுழைவது எளிது வெளியே வருவது கடிது ஆண் : இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! இருதலைக் கொள்ளி எறும்புக்கு ஒருதலைக் காதல் வந்ததே! ஆண் : தன்னைத் தானே மலையில் எறியும் சூரியனைப் போலே நானே என்னை எறிந்து கொண்டேன் நச்செள்ளைக் குள்ளே ஆண் : மலையில் விழுந்த சூரியனை மலைகள் தள்ளுவதில்லை அள்ளிக் கொள்ளுவாயோ தள்ளிச் செல்வாயோ சொல்லிச் செல்லடி நச்செள்ளை ஆண் : தேட செல்லும் ...
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vairamuthu
Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Vairamuthu · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Naatpadu Theral 2
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vairamuthu