Roman script
Singer : P. Bhanumathi Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Irandu thaaikku oru magal iraivan thandhadhu Irandu thaaikku oru magal iraivan thandhadhu En kannae kelamma en thanimai maraindhadhu Irandu thaaikku oru magal iraivan thandhadhu Female Part Oruthiyin kanneeril pirandhaval kannae nee Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee Oruthiyin kanneeril pirandhaval kannae nee Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee Kannanum unaipolae pillaithanamma Pirappum valarppum veru veramma Female Part Thottil katti paadiduven Tholil vaithu thaer izhuppen Vayadhum azhagum valaradho Female Part En kannae kelamma en thanimai maraindhadhu Irandu thaaikku oru magal iraivan thandhadhu Female Part Urimaiyai kondaada thunaiyillai ennodu Unai pettra un thaayoo iniyillai unnodu Urimaiyai kondaada thunaiyillai ennodu Unai pettra un thaayoo iniyillai unnodu Iraivan manadhil enna irakkam paaramma Enakkum unakkum kalam maaruma Female Part Katti unnai naan valarthu Kanni varai paarkkanum Undhan annai konda sondham Pathumaadha bandhamae Female Part En kannae kelamma en thanimai maraindhadhu Irandu thaaikku oru magal iraivan thandhadhu Irandu thaaikku oru magal iraivan thandhadhu En kannae kelamma en thanimai maraindhadhu Irandu thaaikku oru magal iraivan thandhadhu
தமிழ்
பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது பெண் : ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ கண்ணனும் உனைப்போலே பிள்ளைதானம்மா பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா பெண் : தொட்டில் கட்டிப் பாடிடுவேன் தோளில் வைத்துத் தேரிழுப்பேன் வயதும் அழகும் வளராதோ........ பெண் : என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது பெண் : உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு இறைவன் மனதில் என்ன இரக்கம் பாரம்மா எனக்கும் உனக்கும் காலம் மாறுமா பெண் : கட்டி உனை நான் வளர்த்து கன்னி வரைப் பார்க்கணும் உந்தன் அன்னை கொண்ட சொந்தம் பத்துமாத பந்தமே............ பெண் : என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
Song information
Singer: P. Bhanumathi
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Pathumatha Bantham (1974) · Singer: P. Bhanumathi · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Bhanumathi
- Film / album: Pathumatha Bantham
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan