Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Ilai vittu malar vittu kani vitta bhoomi

Yaenguthu kadhalilae

Iru idhayam oru paadhaiyilae

Pudhu ulagam indru bodhaiyilae

Female Part

Ilai vittu malar vittu kani vitta bhoomi

Yaenguthu kadhalilae

Iru idhayam oru paadhaiyilae

Pudhu ulagam indru bodhaiyilae

Female Part

Manthira sangu vaasikkum vandu

Varuvathai paarthaayaa

Mangala pookkal sangathi pesa

Azhaippathai paarththaayaa

Male Part

Anthipatta neram

Anbu konda maangal

Kooduthu paarththaayaa

Antha nilai kaana vantha ilamaathu

Vaaduthu paarththaayaa

Female Part

Ilai vittu malar vittu kani vitta bhoomi

Yaenguthu kadhalilae

Male : Iru idhayam oru paadhaiyilae

Pudhu ulagam indru bodhaiyilae

Male Part

Maivizhi saanthu viyarvaiyil nanainthu

Mayakkangal perugiyatho

manjal mugaththil kolangal pottu

Oviyam varaikindratho

Female Part

Semmani idhazhili oru mutham koduththaal

Sinthanai sitharatho

Siththira kaalgalil paththira ezhutha

En manam padharaatho

Female Part

Ilai vittu malar vittu kani vitta bhoomi

Yaenguthu kadhalilae

Male : Iru idhayam oru paadhaiyilae

Pudhu ulagam indru bodhaiyilae

Male Part

Kannukkul vizhunthu idhayaththil mithanthu

Karaiyinil yaerividu

Female : Pennukkul irukkum ninaivugal yaavum

Perithena kanduvidu

Male Part

Ada innumenna saedhi unnai vidamaattaen

Idhazhgalai thanthuvidu

Female : Indru mudhal neeyum ennadimaiyandro

Rasipathai rasiththu vidu

Male Part

Heahae ilai vittu malar vittu kani vitta bhoomi

Female : Yaenguthu kadhalilae

Male : Iru idhayam

Female : Oru paadhaiyilae

Male : Pudhu ulagam

Female : Indru bodhaiyilae

Both : Ilai vittu malar vittu kani vitta bhoomi

Yaenguthu kadhalilae

Yaenguthu kadhalilae

Yaenguthu kadhalilae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி

ஏங்குது காதலிலே

இரு இதயம் ஒரு பாதையிலே

புது உலகம் இன்று போதையிலே

ஆண் : இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி

ஏங்குது காதலிலே

இரு இதயம் ஒரு பாதையிலே

புது உலகம் இன்று போதையிலே

பெண் : மந்திரச் சங்கு வாசிக்கும் வண்டு

வருவதைப் பார்த்தாயா

மங்கலப் பூக்கள் சங்கதி பேச

அழைப்பதைப் பார்த்தாயா

ஆண் : அந்திப்பட்ட நேரம்

அன்பு கொண்ட மான்கள்

கூடுது பார்த்தாயா

அந்த நிலை காண வந்த இளமாது

வாடுது பார்த்தாயா

பெண் : இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி

ஏங்குது காதலிலே

ஆண் : இரு இதயம் ஒரு பாதையிலே

புது உலகம் இன்று போதையிலே

ஆண் : மைவிழிச் சாந்து வியர்வையில் நனைந்து

மயக்கங்கள் பெருகியதோ

மஞ்சள் முகத்தில் கோலங்கள் போட்டு

ஓவியம் வரைகின்றதோ

பெண் : செம்மணி இதழில் ஒரு முத்தம் கொடுத்தால்

சிந்தனை சிதறாதோ

சித்திரக் கால்களில் பத்திரம் எழுத

என் மனம் பதறாதோ

பெண் : இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி

ஏங்குது காதலிலே

ஆண் : இரு இதயம் ஒரு பாதையிலே

புது உலகம் இன்று போதையிலே

ஆண் : கண்ணுக்குள் விழுந்து இதயத்தில் மிதந்து

கரையினில் ஏறிவிடு

பெண் : பெண்ணுக்குள் இருக்கும் நினைவுகள் யாவும்

பெரிதெனக் கண்டுவிடு

ஆண் : அட இன்னுமென்ன சேதி உன்னை விடமாட்டேன்

இதழ்களைத் தந்துவிடு

பெண் : இன்று முதல் நீயும் என்னடிமையன்றோ

ரசிப்பதை ரசித்து விடு........

ஆண் : ஹெஹே இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி

பெண் : ஏங்குது காதலிலே

ஆண் : இரு இதயம்

பெண் : ஒரு பாதையிலே

ஆண் : புது உலகம்

பெண் : இன்று போதையிலே

இருவர் : இலை விட்டு மலர் விட்டு கனி விட்ட பூமி

ஏங்குது காதலிலே

ஏங்குது காதலிலே

ஏங்குது காதலிலே

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Sonthangal Vazhga (1975) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan

Explore this song