Roman script
Singer : Vani Jayaram Music by : Anand Sankar Female Part Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Female Part Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Azhagiya thirumugam oru mugam Unadhu vadivamae idho Female Part Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Female Part Piravi muzhudhum neeyae sondham Enadhu isaiyil needhaan sandham Uravil valarum vaazhvil bandham Uyiril kalandhu naan paadum geetham thaedum Female Part Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Female Part Nilavilae thavazhum megam adhai polae Uravidum enadhu aasai adhan melae Thunai unai adainthida nan poojai seidhen Kalaimagal nalam pera nee vazhvu thandhaai Female Part Naanthaanae undhan vaazhvaanen Vizhiyae vizhiyin oliyae Anathidum oru maranamum ennai Pirithida ini mudiyumo Marupirappilum unai naan Thodarndhu varuven isaiyaagum neeyae Female Part Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Female Part Adhoo varum alaigal serum kadal saatchi Alai kadal thazhuvum vaanam oru saatchi Ilai thodum thadaiyila kaattraaga maari Ninaivellam unai thoda naan vaazha vendum Female Part Poomalai konda poonjolai Peravae tharuvaai varamae Sarithiram adhu maranthidum oru Neruppilum malar malarnthidum varum Varum kanavilum unai naan maraven Vidikaalai neeyae Female Part Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Azhagiya thirumugam oru mugam Unadhu vadivamae idho Female Part Idhayam muzhudum unadhu uruvam Varaindhen mana kovilil Ninaivugalaal vanangugiren Ninaivugalaal vanangugiren
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : ஆனந்த் சங்கர் பெண் : இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் பெண் : இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் அழகிய திருமுகம் ஒரு முகம் உனது வடிவமே இதோ.... பெண் : இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் பிறவி முழுதும் நீயே சொந்தம் எனது இசையில் நீதான் சந்தம் பெண் : உறவில் வளரும் வாழ்வின் பந்தம் உயிரில் கலந்து நான் பாடும் கீதம் தேடும் இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன்.... பெண் : நிலாவிலே தவழும் மேகம் அதை போலே உலாவிடும் எனது ஆசை அதன் மேலே துணை உனை அடைந்திட நான் பூஜை செய்தேன் கலைமகள் நலம் பெற நீ வாழ்வு தந்தாய் பெண் : நான்தானே உந்தன் வாழ்வானேன் விழியே விழியின் ஒளியே அணைத்திடும் ஒரு மரணமும் என்னை பிரித்திட இனி முடியுமோ மறுபிறப்பிலும் உனை நான் தொடர்ந்து வருவேன் இசையாகும் நீயே பெண் : இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் பெண் : அதோ வரும் அலைகள் சேரும் கடல் சாட்சி அலைக் கடல் தழுவும் வானம் ஒரு சாட்சி இலை தொடும் தடையிலா காற்றாக மாறி நினைவெல்லாம் உனை தொட நான் வாழ வேண்டும் பெண் : பூமாலை கொண்ட பூஞ்சோலை பெறவே தருவாய் வரமே சரித்திரம் அது மறைந்திடும் ஒரு நெருப்பிலும் மலர் மலர்ந்திடும் வரும் கனவிலும் உனை நான் மறவேன் விடிகாலை நீயே... பெண் : இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் அழகிய திருமுகம் ஒரு முகம் உனது வடிவமே இதோ.... பெண் : இதயம் முழுதும் உனது உருவம் வரைந்தேன் மனக் கோயிலில் நினைவுகளால் வணங்குகிறேன் நினைவுகளால் வணங்குகிறேன்
Song information
Singer: Vani Jayaram
Music by: Anand Sankar
Release information: From Yaaro Ezhuthiya Kavithai (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Yaaro Ezhuthiya Kavithai
- Composer: Anand Sankar