Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : A. R. Rahman

Male Part

En kaadhalae en kaadhalae

Ennai enna seiya pogiraai

Naan oviyan endru therindhum nee

Yen kannirandai ketkiraai

Male Part

Siluvaigal siragugal

Rendil enna thara pogiraai

Killuvathai killivittu

Yen thalli nindru paarkiraai

Male Part

En kaadhalae en kaadhalae

Ennai enna seiya pogiraai

Naan oviyan endru therindhum nee

Yen kannirandai ketkiraai

Male Part

Kaadhalae nee poo erinthaal

Entha malaiyum konjam kuzhaiyum

Kaadhalae nee kal erinthaal

Entha kadalum konjam kalangum

Male Part

Ini meelvathaa aaa

Illai veelvathaa…

Uyir vazhvathaa aaa

Illai povathaa..

Amuthenpathaa visham enbathaa..

Illai amuthavishamenbathaa….

Male Part

En kaadhalae en kaadhalae

Ennai enna seiya pogiraai

Naan oviyan endru therindhum nee

Yen kannirandai ketkiraai

Male Part

 Kaadhalae un kaaladiyil

Naan vilunthu vilunthu thozhudhen

Kangalai nee moodi kondaal

Naan kulungi kulungi azhudhen

Male Part

Ithu maatramaa aaa

Thadumaatramaa…

En nenjilae ae…

Pani moottamaa….

Nee tholiyaa …illai ethiriyaa

Endru thinamum poraattamaa..

Male Part

En kaadhalae en kaadhalae

Ennai enna seiya pogiraai

Naan oviyan endru therindhum nee

Yen kannirandai ketkiraai

Male Part

Siluvaigal siragugal

Rendil enna thara pogiraai

Killuvathai killivittu…..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : என் காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : சிலுவைகள் சிறகுகள்

ரெண்டில் என்ன தர போகிறாய்

கிள்ளுவதை கிள்ளி விட்டு

ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

ஆண் : என் காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : காதலே நீ பூ எறிந்தால்

எந்த மலையும் கொஞ்சம் குழையும்

காதலே நீ கல் எறிந்தால்

எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

ஆண் : இனி மீள்வதா ஆஅ

இல்லை வீழ்வதா..

உயிர் வாழ்வதா ஆஅ

இல்லை போவதா..

அமுதென்பதா விஷம் என்பதா..

இல்லை அமுதவிஷமென்பதா

ஆண் : என் காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : காதலே உன் காலடியில்

நான் விழுந்து விழுந்து தொழுதேன்

கண்களை நீ மூடிக்கொண்டால்

நான் குலுங்கி குலுங்கி அழுதேன்

ஆண் : இது மாற்றமா ஆஅ

தடுமாற்றமா..

என் நெஞ்சிலே ஏ

பனி மூட்டமா..

நீ தோழியா... இல்லை எதிரியா

என்று தினமும் போராட்டமா...

ஆண் : என் காதலே என் காதலே

என்னை என்ன செய்ய போகிறாய்

நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ

ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்

ஆண் : சிலுவைகள் சிறகுகள்

ரெண்டில் என்ன தர போகிறாய்

கிள்ளுவதை கிள்ளிவிட்டு.....

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: A. R. Rahman

Release information: From Duet (1994) · Lyricist: Vairamuthu

Explore this song