Roman script
Singer : Srinisha Jayaseelan Music by : N. R. Raghunanthan Female Part En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma Female Part Vayadhal naam vaazhvu muriyuma Vaai mutham vayadhu ariyuma Nila vennila vayadhil moothadhillaiya Irundhum nilavu solli ilaiya alli malarvadhillaiya Female Part En vaazhvil thandhai illaiyae Thandhai pol kanavan vendumae….aaa… Female Part En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma Female Part Aanum pennum servadhu Aasai pokkil nervadhu Kaadhal needhi enbadhu Kaalam dhorum maarudhu Female Part Vettukkiliyin rathama Vellaiyaga ulladhu Vidhigal ezhudhum yettilae Vidhivilakkum ulladhu Female Part Aazhi romba moothadhu Aaru romba ilaiyadhu Aaru sendru serumbodhu Yaaru kelvi ketpadhu…aa….aa….aaa… Female Part Kaadhal sindhum mazhaiyilae Kaalam dhesam azhiyudhae Engae sindhai azhiyudho Kaadhal angae malarudhae Female Part Arivazhindhu pona pin Vayadhu vandhu thondruma Porul azhindhu pona pin Nizhal kidandhu vaazhuma Female Part Aramirukkum vaazhvilae Muranirukkum enbadhal Muranirukkum vaazhvilum Aramirukkum illaiya…aa…aa…aa… Female Part En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma Female Part En kaadhala Kaadhal vayadhu paarkkuma Naanum chinna kandru endru Indru sindhai maaruma
தமிழ்
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா பெண் : வயதால் நம் வாழ்வு முறியுமா வாய் முத்தம் வயது அறியுமா நிலா வெண்ணிலா வயதில் மூத்ததில்லையா இருந்தும் நிலவு சொல்லி இளைய அல்லி மலர்வதில்லையா பெண் : என்வாழ்வில் தந்தை இல்லையே தந்தைபோல் கணவன் வேண்டுமே...ஆஅ.... பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா பெண் : ஆணும் பெண்ணும் சேர்வது ஆசைப் போக்கில் நேர்வது காதல் நீதி என்பது காலம் தோறும் மாறுது பெண் : வெட்டுக்கிளியின் ரத்தமோ வெள்ளையாக உள்ளது விதிகள் எழுதும் ஏட்டிலே விதிவிலக்கும் உள்ளது பெண் : ஆழி ரொம்ப மூத்தது ஆறு ரொம்ப இளையது ஆறு சென்று சேரும்போது யாரு கேள்வி கேட்பது?...ஆஅ.... பெண் : காதல் சிந்தும் மழையிலே காலம் தேசம் அழியுதே எங்கே சிந்தை அழியுதோ காதல் அங்கே மலருதே பெண் : அறிவழிந்து போனபின் வயது வந்து தோன்றுமா பொருள் அழிந்து போனபின் நிழல் கிடந்து வாழுமா... பெண் : அறமிருக்கும் வாழ்விலே முரணிருக்கும் என்பதால் முரணிருக்கும் வாழ்விலும் அறமிருக்கும் இல்லையா.......ஆஅ.... பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா பெண் : என் காதலா காதல் வயது பார்க்குமா நானும் சின்னக் கன்று என்று இன்று சிந்தை மாறுமா
Song information
Singer: Srinisha Jayaseelan
Music by: N. R. Raghunanthan
Release information: From Naatpadu Theral (2021) · Singer: Srinisha Jayaseelan · Lyricist: Vairamuthu · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: Srinisha Jayaseelan
- Film / album: Naatpadu Theral
- Composer: N. R. Raghunanthan