Roman script

Singer : Bharathwaj

Music by : Bharathwaj

Male Part

Chinna vayasila odi pudichen

Niththam kabadigal aadi jeyichen

Chinna vayasila odi pudichen

Niththam kabadigal aadi jeyichen

Male Part

Kattaan tharaiyellaam

Kangal simittudhae

Patta maram kooda

Paarthu sirikkudhae

Pazhaiya nenavu thirumbudhae

Paavam manasu yengudhae

Male Part

Mannu manakkudhae

Nenju varaikkum

Kannu kalangudhae

Kalli chedikkum

Kudukkaa puli maramum

Koththu koththaa kaachirukku

Kaadhu kuththi kari samaicha

Naalum nenavirukku

Meendum ilamai thirumbumaa

Udhirndha uravu pookkumaa….

Male Part

Nadandhu pazhagiya

Veedhi veli ellaam

Kaadhodu kai kulukkki

Nalam kekudhae

Velanja nelam ellam

Vayasa marandhudhaan

Pazhasai marakaamal

Thalai aatudhae

Male Part

Mazhaikku kodai pudichcha

Maamaaramum kaanalaiyae

Vazhukkum varappil ellaam

Odi paaka thiram illaiyae

Kaalam kelvi kekudhae

Kanneer kannai maraikudhae

Kaalam kelvi kekudhae

Kanneer kannai maraikudhae

தமிழ்

பாடகர் : பரத்வாஜ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : சின்ன வயசில

ஓடி புடிச்சேன் நித்தம்

கபடிகள் ஆடி ஜெயிச்சேன்

சின்ன வயசுல ஓடி புடிச்சேன்

நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்

ஆண் : கட்டாந்தரை

எல்லாம் கண்கள்

சிமிட்டுதே பட்ட மரம்

கூட பாா்த்து சிரிக்குதே

பழைய நெனவு திரும்புதே

பாவம் மனசு ஏங்குதே

ஆண் : மண்ணு மணக்குதே

நெஞ்சு வரைக்கும் கண்ணு

கலங்குதே கள்ளி செடிக்கும்

கொடுக்கா புளி மரமும்

கொத்து கொத்தா காய்ச்சிருக்கு

காது குத்தி கறி சமைச்ச நாளும்

நெனவிருக்கு மீண்டும் இளமை

திரும்புமா உதிர்ந்த உறவு

பூக்குமா

ஆண் : நடந்து பழகிய

வீதி வெளி எல்லாம்

காதோடு கை குலுக்கி

நலம் கேக்குதே வெளஞ்ச

நிலம் எல்லாம் வயச மறந்து

தான் பழசை மறக்காமல்

தலை ஆட்டுதே

ஆண் : மழைக்கு குடை

புடிச்ச மாமரமும் காணலையே

வழுக்கும் வரப்பில் எல்லாம்

ஓடி பாக்க திறம் இல்லையே

காலம் கேள்வி கேக்குதே

கண்ணீர் கண்ணை மறைக்குதே

காலம் கேள்வி கேக்குதே கண்ணீர்

கண்ணை மறைக்குதே

Song information

Singer: Bharathwaj

Music by: Bharathwaj

Release information: From Pandavar Bhoomi (2001) · Lyricist: Snehan

Explore this song