Roman script

Singers : Gowtham Bharadwaj and Rajesh Murugesan

Music by : Rajesh Murugesan

Dialogue : .……………….

Male Part

Solladha vaarthaigal suvaiyanavai

Arthathil avai mattum azhaganavai

Sollukkul unnai surukki vida manam illai

Alavilla unarvugalai arai pakkathil adaithu vaikkum

Aasaiyum irunthathillai

Male Part

Un netri parappil en viral thodum bothum

Un kazhuthil paravi en moochu sudum bodhum

Un uyirai ezhuppa naan mutham idum bothum

Purindhu kol en peranbai

Male Part

Solladha varthaigal suvaiyanavai

Arthathil avai mattum azhaganavai

Male Part

Avalo avalo nilavin bodhai thugalo

Avalo avalo kaar kuzhal viriyum mayilo

Dhisai ariyadha megam

Thalayinil vizhutho

Kadavul kai kondu ezhutha mudiyatha

Kavinjanin karpanaiyo

Male Part

Kodhai madiyil thogai kanavu

Kodhum viralaga en vaazhvu

Theanaadum ninaivellam aval thaana

Thevai ellaam aval thendral mugam thaana

Male Part

Thoorigai kaarigai

Nee seidha vannangal naan

Unnai polae en bimbam

Ullae vaazhvadhu naanaa… neethaana

Aaa….aaa….aaa….

Male Part

……………………….

தமிழ்

பாடகர்கள் : கெளதம் பரத்வாஜ் மற்றும் ராஜேஷ் முருகேசன்

இசையமைப்பாளர் : ராஜேஷ் முருகேசன்

வசனம் : ....................

ஆண் : சொல்லாத வார்த்தைகள் சுவையானவை

அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை

சொல்லுக்குள் உன்னை சுருக்கி விட மனம் இல்லை

அளவில்லா உணர்வுகளை அரை பக்கத்தில் அடைத்து வைக்கும்

ஆசையும் இருந்ததில்லை

ஆண் : உன் நெற்றி பரப்பில் என் விரல் தொடும் போதும்

உன் கழுத்தில் பரவி என் மூச்சு சுடும் போதும்

உன் உயிரை எழுப்ப நான் முத்தம் இடும் போதும்

புரிந்துகொள் என் பேரன்பை

ஆண் : சொல்லாத வாரத்தைகள் சுவையானவை

அர்த்தத்தில் அவை மட்டும் அழகானவை

ஆண் : அவளோ அவளோ நிலவின் போதை துகளோ

அவளோ அவளோ கார் குழல் விரியும் மயிலோ

திசை அறியாத மேகம்

தலையினில் விழுதோ

கடவுள் கை கொண்டு எழுத முடியாத

கவிஞனின் கற்பனையோ.....

ஆண் : கோதை மடியில் தோகை கனவு

கோதும் விரலாக என் வாழ்வே

தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா

தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானா....ஆ.....

ஆண் : தூரிகை காரிகை

நீ செய்த வண்ணங்கள் நான்

உன்னை போலே என் பிம்பம்

உள்ளே வாழ்வது நானா.......நீதானா

ஆஅ.....ஆஅ.....ஆஅ.....

ஆண் : ...........................

Song information

Singers: Gowtham Bharadwaj and Rajesh Murugesan

Music by: Rajesh Murugesan

Release information: From Vasantha Mullai (2023) · Lyricist: Vivek

Explore this song