தமிழ்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் நதியிலே புது புனல் கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே இனியெல்லாம் சுகமே
Song details
படம்: அவள் அப்படித்தான் (1978)
பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
Album: அவள் அப்படித்தான்
- Singer: கே.ஜே. யேசுதாஸ்
- Film / album: அவள் அப்படித்தான்
- Composer: இளையராஜா
- Lyricist: கங்கை அமரன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: ரஜினிகாந்த்
- Actor: ஸ்ரீபிரியா
- Actor: சிவச்சந்திரன்
- Actor: சரிதா