தமிழ்

பெண் : நகுமோ ஹே சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது
மூடும் இளங்கொடி
ஆண் : நகுமோ ஹே சுகமோ
வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது
ஆடும் இளங்கொடி
பெண் : நகுமோ ஹே சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது
மூடும் இளங்கொடி
நகுமோ ஓஓஓ
பெண் : வெள்ளி கொலுசு இது
ஓசை ஓசை இட
வெள்ளிக் கிழமையில்
ஆசை ஆசை வர
முத்தம் தருகையில்
மீசை மீசை வந்து
மோகம் தூண்டி விடுதே
ஆண் : உச்சந்தலையில
என்னை எண்ணிக் கொண்டு
உள்ளங்கால் வரை
பின்னி பின்னிக் கொண்டு
முத்தம் தருகையில்
மோகமான கிளி
உதட்ட கடிச்சு விட்டதே
பெண் : நெசமா
ஆண் : நெசந்தான்
பெண் : காயமா
ஆண் : பாருமா
பெண் : ரி ரி க
ஆண் : ப ப க
பெண் : ரி ரி க
ஆண் : ப ப க
ஆண் & பெண் : க ரி ச நி ச நி
ச நி தா ப த ச ரி
பெண் : நகுமோ
ஆண் : ஹே சுகமோ
பெண் : வெட்கம் விடுமோ
ஆண் : முத்தம் போடும் போது
ஆடும் இளங்கொடி
பெண் : நகுமோ ஓஓஓ
பெண் : அல்லி மலர்வது
இரவு நேரத்துல
மல்லி மலர்வது
மாலை நேரத்துல
பெண்மை மலர்வது
எந்த நேரத்துல
எங்க கண்டு பிடிச்ச
ஆண் : கட்டை விரல் கொண்டு
கோலம் போடுகையில்
கண்ணின் கடைவிழி
சாய்ந்து மூடுகையில்
காலின் கொலுசுகள்
தாளம் ஆடுகையில்
பெண்மை மலர்ந்து நிற்குமே
ஆண் : சரியா
பெண் : சரிதான்
ஆண் : பரிசு
பெண் : இதுதான்
ஆண் : ரி ரி க
பெண் : ப ப க
ஆண் : ரி ரி க
பெண் : ப ப க
ஆண் & பெண் : க ரி ச நி ச நி
ச நி தா ப த ச ரி
பெண் : நகுமோ ஹே சுகமோ
வெட்கம் விடுமோ
முத்தம் போடும் போது
மூடும் இளங்கொடி
ஆண் : நகுமோ ஹே சுகமோ
வெட்கம் தகுமோ
முத்தம் போடும் போது
ஆடும் இளங்கொடி
பெண் : நகுமோ ஓஓஓ

Song details

படம்: அருணாச்சலம் (1997)

இசை: தேவா

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள்: ஹரிஹரன் & கே.எஸ். சித்ரா

Album: அருணாச்சலம்

Song video

Watch on YouTube