தமிழ்

ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன்
அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டி ஆடப் போறேன்
ஆண் : வந்தேன்டா பால்காரன்
அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டி ஆடப் போறேன்
ஆண் : புல்லு கொடுத்தா
பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி
அட பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி
ஆண் : ஹோய் வந்தேன்டா பால்காரன்
அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டி ஆடப் போறேன்
ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி
பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
ஆண் : அது பிரித்தாலும் பாலோடு
தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
ஆண் : தன் ரத்தத்தில் ஒரு பாதி
பாலாக பிரிப்பது
பசுவோட வேலையப்பா
ஆண் : அது பிரித்தாலும் பாலோடு
தண்ணீரைக் கலப்பது
மனிதனின் மூளையப்பா
ஆண் : சாணம் விழுந்தா உரம் பாரு
எருவை எரிச்சா திருநீறு
உனக்கு என்ன வரலாறு ஹே ஹே
உண்மை சொன்னா தகராறு
ஆண் : நீ மாடு போல உழைக்கலியே
நீ மனுஷனை ஏய்ச்சு பொழைக்கிறியே
ஆண் : வந்தேன்டா பால்காரன்
அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டி ஆடப் போறேன்
குழு : தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தானனா தன தந்தானனா
தன தந்தனா தந்தனா தந்தனா னா
தந்தனா தந்தனா தந்தனா
ஆண் : அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும் கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
ஆண் : அட மீன் செத்தா கருவாடு
நீ செத்தா வெறும்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க
ஆண் : பசு இருந்தாலும் பாலாகும்
செத்தாலும் தோலாகும்
நான் கண்டு சொன்னதுங்க
ஆண் : அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம்
ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க
அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம்
அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க
ஆண் : அன்னை வாரி கொடுத்தது தாய் பாலு
என்னை வாழ வைத்தது தமிழ் பாலு
ஆண் : வந்தேன்டா பால்காரன்
அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டி ஆடப் போறேன்
ஆண் : புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்
உன்னால முடியாது தம்பி ஹா
அட பாதி புள்ள பொறக்குதப்பா
பசும்பால தாய் பாலா நம்பி
ஆண் : வந்தேன்டா பால்காரன்
அடடா பசு மாட்ட பத்தி பாடப் போறேன்
புது பாட்டு கட்டி ஆடப் போறேன் ஹா

Song details

படம்: அண்ணாமலை (1992)

பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசை: தேவா

இயற்றியவர்: வைரமுத்து

Album: அண்ணாமலை

Song video

Watch on YouTube