Roman script

Singer : Karthik

Music by : Sabesh – Murali

Male Part

Anjalpettiyai kandadhumae

Kangal sirippadhaen

En nejukkullae pattaampoochchi

Rekkai virippadhaen

Thulli thirindha endhan naatkkal

Thayangi nadappadhaen

En tholukku melae thoorigai theendum

Unarvu mulaippadhaen

Raattinangal moolaikkullae

Suttri suzhalvadhaen

En naadi thudippu nooru madangaai

Nodiyum Uyarvadhaen

Male Part

Bambarangal kaalil suzhalum

Paraparappu yen

En angam engum pudhu pudhu minnal

Uruveduppadhaen

Male Part

Anjalpettiyai kandadhumae

Kangal sirippadhaen

En nejukkullae pattaampoochchi

Ratta ratta ra ra..

Male Part

Oonjalaadum manamae unakku

Enna nadandhadhu

Naan oivillaamal thaththith thaava

Ulagam marandhadhu

Male Part

Uchchanthalaiyai vaanavillum

Thuvattugindradhu

En ullangkaiyyil regai poovaai

Malarugindradhu

Male Part

Ullaththuniyai swaasakkaattru

Salavai seidhadhu

Naan ovvoru nodiyum pirappadhu pola

Kavidhai sonnadhu

Male Part

Kanavil midhandhu nadanam aada

Kaal ninaiththadhu

Naan karaya karaya mela poga

Vaal mulaiththadhu

Male Part

Ennai naanae rasiththu kollum

Nilamaiyaanadhu

Idhu niththam nigazhum

Aanaal kooda pudhumaiyaanadhu

தமிழ்

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே

கண்கள் சிரிப்பதேன்

என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி

ரெக்கை விரிப்பதேன்

துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள்

தயங்கி நடப்பதேன்

என் தோளுக்குமேலே தூரிகை தீண்டும்

உணர்வு முளைப்பதேன்

இராட்டிணங்கள் மூளைக்குள்ளே

சுற்றிச்சுழல்வதேன்

என் நாடித்துடிப்பு நூறு மடங்காய்

நொடியும் உயர்வதேன்

ஆண் : பம்பரங்கள் காலில் சுழலும்

பரபரப்பு ஏன்

என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல்

உருவெடுப்பதேன்

ஆண் : அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே

கண்கள் சிரிப்பதேன்

என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி

ரத்த ரத்தரா

ஆண் : ஊஞ்சலாடும் மனமே உனக்கு

என்ன நடந்தது

நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ

உலகம் மறந்தது

ஆண் : உச்சந்தலையை வானவில்லும்

துவட்டுகின்றது

என் உள்ளங்கையில் ரேகை பூவாய்

மலருகின்றது

ஆண் : உள்ளத்துணையை

சுவாசக்காற்று சலவைசெய்தது

நான் ஒவ்வொரு நொடியும்

பிறப்பது போல கவிதை சொன்னது

ஆண் : கனவில் மிதந்து நடனம் ஆட

கால் நினைத்தது

நான் கரையக் கரைய மேலேப் போக

வால் முளைத்தது

ஆண் : என்னை நானே ரசித்துக்கொள்ளும்

நிலைமையானது

இது நித்தம் நிகழும்

ஆனால் கூட புதுமையானது

Song information

Singer: Karthik

Music by: Sabesh – Murali

Release information: From Pokkisham (2009) · Lyricist: Yugabharathi

Explore this song