Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Anthi varum neraththilae Anju vanna poo eduththu Naalthorum ambu vidum manma Unnai yaaraenum kandathundo manmatha raja Female Part Anthi varum neraththilae Anju vanna poo eduththu Naalthorum ambu vidum manma Unnai yaaraenum kandathundo manmatha raja Male Part Muthu vanna maalaiyittu Moga vanna selai katti Muthu vanna maalaiyittu Moga vanna selai katti Therottam aadi varum devathai yaaro Intha devathaikku pennazhagu radhiyennum pero Male Part Muthu vanna maalaiyittu Moga vanna selai katti Therottam aadi varum devathai yaaro Intha devathaikku pennazhagu radhiyennum pero Female Part Kannirendil unnuvathum Kayirendai pinnuvathu Kannirendil unnuvathum Kayirendai pinnuvathu Enna kalai theriyavillai Idhai palliyilum padikkavillai Male Part Inba veri kolluvathum Eerudalgal thulluvathum Inba veri kolluvathum Eerudalgal thulluvathum Enna sugam puriyavillai Entha yaedum idhai vilakkavillai Female Part Paavai enthan ullam Pothum pothumennum Male : Bodhaiyerum kangal Thevai thevaiyennum Mouna mozhi kettaenadi Adhil maaya valai paarthenadi Female Part Gangai mudi sangaranaar Kaaman unai yaevi vittar Mogamennum thuyar koduththaar Muppuram pola unai eriththaar Male Part Aada vantha sangaranai Aatti vaiththa manmathanai Bhoomithanil azhipathundo Nyanigalum jeyipathundo Female Part Yaagam yogam endru koorum yaavum ingu Male : Kaamam mogam kandu maarum maarum Endru Ethanaiyo saatchiyundu Visuvaamithiranin kadhaiyundu Female Part Anthi varum neraththilae Anju vanna poo eduththu Naalthorum ambu vidum manma Unnai yaaraenum kandathundo manmatha raja Manmatha raja manmatha raja
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அந்தி வரும் நேரத்திலே அஞ்சு வண்ண பூ எடுத்து நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா..... பெண் : அந்தி வரும் நேரத்திலே அஞ்சு வண்ண பூ எடுத்து நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா..... ஆண் : முத்து வண்ண மாலையிட்டு மோக வண்ண சேலைக் கட்டி முத்து வண்ண மாலையிட்டு மோக வண்ண சேலைக் கட்டி தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதியென்னும் பேரோ.... ஆண் : முத்து வண்ண மாலையிட்டு மோக வண்ண சேலைக் கட்டி தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதியென்னும் பேரோ.... பெண் : கண்ணிரெண்டில் உண்ணுவதும் கையிரெண்டை பின்னுவதும் கண்ணிரெண்டில் உண்ணுவதும் கையிரெண்டை பின்னுவதும் என்ன கலை தெரியவில்லை இதை பள்ளியிலும் படிக்கவில்லை ஆண் : இன்ப வெறி கொள்ளுவதும் ஈருடல்கள் துள்ளுவதும் இன்ப வெறி கொள்ளுவதும் ஈருடல்கள் துள்ளுவதும் என்ன சுகம் புரியவில்லை எந்த ஏடும் இதை விளக்கவில்லை பெண் : பாவை எந்தன் உள்ளம் போதும் போதுமென்னும் ஆண் : போதையேறும் கண்கள் தேவை தேவையென்னும் மௌன மொழிக் கேட்டேனடி அதில் மாய வலை பார்த்தேனடி..... பெண் : கங்கை முடி சங்கரனார் காமன் உனை ஏவி விட்டார் மோகமெனும் துயர் கொடுத்தார் முப்புரம் போல உனை எரித்தார் ஆண் : ஆட வந்த சங்கரனை ஆட்டி வைத்த மன்மதனை பூமிதனில் அழிப்பதுண்டோ ஞானிகளும் ஜெயிப்பதுண்டோ பெண் : யாகம் யோகம் என்று கூறும் யாவும் இங்கு ஆண் : காமம் மோகம் கண்டு மாறும் மாறும் என்று எத்தனையோ சாட்சியுண்டு விச்வாமித்ரனின் கதையுண்டு..... பெண் : அந்தி வரும் நேரத்திலே அஞ்சு வண்ண பூ எடுத்து நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா மன்மத ராஜா மன்மத ராஜா
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nee Vazha Vendum (1977) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Nee Vazha Vendum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan