Roman script
Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari Music by : Kunnakudi Vaidyanathan Dialogues : ……………………… Female Part Anangan angagan anban Vasanthan manmadhan endrum Vanangum en uyir mannavaa Anangan angagan anban Vasanthan manmadhan endrum Vanangum en uyir mannavaa Mannuyirkkinbam vazhangum Un pugazh sollavaa Male Part Kadhambam senbagam thangum Kangoonthal kavin pongum Kanindhongum kayarkkanniyae Kadhambam senbagam thangum Kangoonthal kavin pongum Kanindhongum kayarkkanniyae Anbezhundhangam kalandhinbam tharum kanniyae Female Part Aadalum paadalum anbin oodalum koodalum Inbam thaedalum un seyal allavaa Aadalum paadalum anbin oodalum koodalum Inbam thaedalum un seyal allavaa Nee illai endraal vaadidum vaiyagam allavaa Male Part Azhagu thamizhae pazhagum isaiyae Amudha nilaiyae unadhu seyalaal Andharanga sindhu paaduvaar Azhagu thamizhae pazhagum isaiyae Amudha nilaiyae unadhu seyalaal Andharanga sindhu paaduvaar Sandhadham kaadhal mandhirathai dhinam naaduvaar Female Part Manam konjum malar manjam Adaindhullam kulirndhangam Kalandhanbin nalam kaanuvom Male Part Gunam kol pen anangae Un manam konden manam thandhaen Inaindhondraai sugam kaanuvom Female Part Kalandhanbin nalam kaanuvom Male Part Inaindhondraai sugam kaanuvom Female Part Mannaa vaa Male Part Kannae vaa Female Part Nee vaa Male Part Vaa…aa Female Part Anangan angagan anban Vasanthan manmadhan endrum Vanangum en uyir mannavaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் வசனம் : ........................... பெண் : அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா மண் உயிர் பிம்பம் வழங்கும் உன் புகழ் சொல்லவா...... ஆண் : கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின் பொங்கும் கனிந்து ஓங்கும் கயர் கன்னியே கதம்பம் செண்பகம் தங்கும் கருங்கூந்தல் கவின் பொங்கும் கனிந்து ஓங்கும் கயர் கன்னியே அன்பெழுந்தங்கம் கலந்தின்பம் தரும் கன்னியே பெண் : ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும் இன்பம் தேடலும் உன் செயல் அல்லவா ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும் இன்பம் தேடலும் உன் செயல் அல்லவா நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா ஆண் : அழகு தமிழே பழகும் இசையே அமுத நிலையே உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார் அழகு தமிழே பழகும் இசையே அமுத நிலையே உனது செயலால் அந்தரங்கச் சிந்து பாடுவார் சந்ததம் காதல் மந்திரத்தை தினம் நாடுவார் பெண் : மனம் கொஞ்சும் மலர் மஞ்சம் அடைந்துள்ளம் குளிர் தங்கம் கலந்தன்பின் நலம் காணுவோம் ஆண் : குணம்கொள் பெண் அனங்கே உன் மனம் கொண்டே மனம் தந்தேன் இணைந்தொன்றாய் சுகம் காணுவோம் பெண் : கலந்தன்பின் நலம் காணுவோம் ஆண் : இணைந்தொன்றாய் சுகம் காணுவோம் பெண் : மன்னா வா...... ஆண் : கண்ணே வா..... பெண் : நீ வா..... ஆண் : வா....ஆ..... பெண் : அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by: Kunnakudi Vaidyanathan
Release information: From Kankaatchi (1971) · Lyricist: Nellai Arulmani
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and L. R. Eswari
- Film / album: Kankaatchi
- Composer: Kunnakudi Vaidyanathan