Roman script
Singer : Ghantasala Music by : A. Rama Rao and Hemant Kumar Male Part Amma aa nee kalangaadhae Amma aa..nee thayangaadhae Kanavanae kan kanda dheivam yena Madhithaayae Amma aaa neeyallavo pen dheivam Male Part Bharadha naattirkku perumai Azhithidum anikalan penkulamae..ae.. Anikalan penkulamae…ae… Bharadha naattirkku perumai Azhithidum anikalan penkulamae..ae.. Anikalan penkulamae…ae… Male Part Veeramadaivarae thunbathilum Veeramadaivarae thunbathilum Uyar ganniyamum perum punniyamum Thanniyalbaai kolvaal Vazhvinai maghizha vaippaal Male Part Kaanagamae inba veedena Nizhal polae Kaanagamae inba veedena Nizhal polae Janaki pin thodarndhaal pathiyudan Janaki pin thodarndhaal Male Part Kanavan panividaiyil Manipaniyaadaigal Kanavan panividaiyil Manipaniyaadaigal Thurumbaai karudhum madandhai dheivam Male Part Kadavularum karpudaiya mangaiyargal Aanaikku kaathiruppaar Kadavularum karpudaiya mangaiyargal Aanaikku kaathiruppaar Aval dheivam thozhaal Thozhunar thozhudhezhuvaal Aval dheivam thozhaal Thozhunar thozhudhezhuvaal Peiyena peiyum mazhai Peiyena peiyum mazhai Male Part Thannalam siridhum karudhaal Udal porul thyaagamae uru kondaal Thannalam siridhum karudhaal Udal porul thyaagamae uru kondaal Thuyar ethanai varinum Boomi polae thaanum Mana urudhiyum kondaal Male Part Punnagai in sollum Porppaniyaai anindhu Punnagai in sollum Porppaniyaai anindhu Anbae uru kondaal dheiva Anbae uru kondaal
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார் ஆண் : அம்மா....ஆ.... நீ கலங்காதே அம்மா....ஆ....நீ தயங்காதே கணவனே கண் கண்ட தெய்வம் என மதித்தாயே அம்மா ஆ நீயல்லவோ பெண் தெய்வம் ஆண் : பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலமே...ஏ.... அணிகலன் பெண்குலமே...ஏ.... பாரத நாட்டிற்கு பெருமை அளித்திடும் அணிகலன் பெண்குலமே...ஏ.... அணிகலன் பெண்குலமே...ஏ.... ஆண் : வீரமடைவாரே துன்பத்திலும் வீரமடைவாரே துன்பத்திலும் உயர் கண்ணியமும் பெரும் புண்ணியமும் தன்னியல்பாய் கொள்வாள் வாழ்வினை மகிழ வைப்பாள் ஆண் : கானகமே இன்ப வீடென நிழல் போலே கானகமே இன்ப வீடென நிழல் போலே ஜானகி பின் தொடர்ந்தாள் பதியுடன் ஜானகி பின் தொடர்ந்தாள் ஆண் : கணவன் பணிவிடையில் மணிபணியாடைகள் கணவன் பணிவிடையில் மணிபணியாடைகள் துரும்பாய் கருதும் மடந்தை தெய்வம் ஆண் : கடவுளரும் கற்புடைய மங்கயர்கள் ஆணைக்குக் காத்திருப்பார் கடவுளரும் கற்புடைய மங்கயர்கள் ஆணைக்குக் காத்திருப்பார் அவள் தெய்வம் தொழாள் தொழுனர் தொழுதெழுவாள் அவள் தெய்வம் தொழாள் தொழுனர் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை பெய்யெனப் பெய்யும் மழை ஆண் : தன்னலம் சிறிதும் கருதாள் உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள் தன்னலம் சிறிதும் கருதாள் உடல் பொருள் தியாகமே உருக் கொண்டாள் துயர் எத்தனை வரினும் பூமி போலே தானும் மன உறுதியும் கொண்டாள் ஆண் : புன்னகை இன் சொல்லும் பொற்பணியாய் அணிந்து புன்னகை இன் சொல்லும் பொற்பணியாய் அணிந்து அன்பே உருக் கொண்டாள் தெய்வ அன்பே உருக் கொண்டாள்
Song information
Singer: Ghantasala
Music by: A. Rama Rao and Hemant Kumar
Release information: From Kanavaney Kankanda Deivam (1955) · Lyricist: K.V.Srinivasan
Explore this song
- Singer: Ghantasala
- Film / album: Kanavaney Kankanda Deivam
- Composer: A. Rama Rao and Hemant Kumar