Roman script
Singers : Dharapuram Sundarajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae Antha aattamum paattamum kudumba ponnukku Aagaathae aagaathae aagaathae…. Female Part Eduththathukkellaam kurukkae vizhunthu Kedukkaathae kedukkaathae kedukkaathae Eduththathukkellaam kurukkae vizhunthu Kedukkaathae kedukkaathae kedukkaathae Enga paattan soththila aattam pottaal Thadukkaathae thadukkaathae thadukkaathae Male Part Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae aadaathae Male Part Veththilai pottu sivakka venum Paththini ponnu udhadu Kanda saayaththai poosi vaaya Thoranthaa panaththukku kedu Male Part Koththu manjalai kozhaichchu potta Mugaththiyum paaru Adhil maavai araichchu poosiyirunthaa Sagikkala paaru….aahaa…..sagikkala paaru…. Female Part Koondhalukkeththa poovai soodi
Azhagu paarkkanum Nalla kudumba pennum aadal kalaiyai Pazhagi paarkkanum Female Part Iduppa valaichchu aadumpothu Rasichchu paarkkanum Unakku ishtamillaatti kashtapadaama Odhungi irukkanum Male Part Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae aadaathae Male Part Mathavi potta aattaththinaalae Kovalan kettaanae Avan mangal mangai kannagi pennai Maranthu ponaanae Male Part Sutta piragu puththi poranthu Sattiyai vittaanae Avan pattathukkellaam kaaranam Intha naatiyamthaanae Female Part Vanna mayilgalil chinna Kuyilgalil pennum oru jaathi Aval aadi thirivathum paadi parappathum Iyarkkaiyin needhi Female Part Kannukkazhagaana ponnu mugamthaan Vennilavin paathi Adhai kattuppaduththa sattam vithippathu Anthakkaala saedhi aahaahaa anthakaala saedhi Male Part Aduththavan potta thaalaththukellaam Aadaathae aadaathae aadaathae Female : Eduththathukkellaam kurukkae vizhunthu Kedukkaathae kedukkaathae kedukkaathae
தமிழ்
பாடகர்கள் : தாராபுரம் சுந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே அந்த ஆட்டமும் பாட்டமும் குடும்ப பொண்ணுக்கு ஆகாதே ஆகாதே ஆகாதே.... பெண் : எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே எங்க பாட்டன் சொத்தில ஆட்டம் போட்டால் தடுக்காதே தடுக்காதே தடுக்காதே..... ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே ஆடாதே ஆண் : வெத்திலை போட்டு சிவக்க வேணும் பத்தினி பொண்ணு உதடு கண்ட சாயத்தைப் பூசி வாயத் தொறந்தா பணத்துக்கு கேடு.... ஆண் : கொத்து மஞ்சளை கொழைச்சு போட்ட முகத்தையும் பாரு அதில் மாவை அரைச்சு பூசியிருந்தா...... சகிக்கல பாரு......ஆஹா......சகிக்கல பாரு..... பெண் : கூந்தலுக்கேத்த பூவைச் சூடி அழகு பார்க்கணும் நல்ல குடும்ப பெண்ணும் ஆடல் கலையை பழகிப் பார்க்கணும் பெண் : இடுப்ப வளைச்சு ஆடும்போது ரசிச்சுப் பார்க்கணும் உனக்கு இஷ்டமில்லாட்டி கஷ்டப்படாம ஒதுங்கி இருக்கணும் ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே ஆடாதே ஆண் : மாதவி போட்ட ஆட்டத்தினாலே கோவலன் கெட்டானே அவன் மங்கல மங்கை கண்ணகி பெண்ணை மறந்து போனானே ஆண் : சுட்டப் பிறகு புத்தி பொறந்து சட்டியை விட்டானே அவன் பட்டதுக்கெல்லாம் காரணம் இந்த நாட்டியம் தானே பெண் : வண்ண மயில்களில் சின்னக் குயில்களில் பெண்ணும் ஒரு ஜாதி அவள் ஆடித் திரிவதும் பாடிப் பறப்பதும் இயற்கையின் நீதி பெண் : கண்ணுக்கழகான பொண்ணு முகம்தான் வெண்ணிலவின் பாதி அதை கட்டுப்படுத்த சட்டம் விதிப்பது அந்தக்கால சேதி ஆஹாஹா அந்தக்கால சேதி ஆண் : அடுத்தவன் போட்ட தாளத்துகெல்லாம் ஆடாதே ஆடாதே ஆடாதே பெண் : எடுத்ததுக்கெல்லாம் குறுக்கே விழுந்து கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே
Song information
Singers: Dharapuram Sundarajan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Thenum Paalum (1971) · Singer: Dharapuram Sundarajan and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Dharapuram Sundarajan and L. R. Eswari
- Film / album: Thenum Paalum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali