Roman script
Singer : S. Janaki Music by : T. G. Lingappa Female Part Attangal pal undu Avaigalil idhu ondru Attangal pal undu Avaigalil idhu ondru Thottrathil therivadhu ondru Mana thudippil iruppadhu ondru Mana thudippil iruppadhu ondru Female Part Haaa… Attangal pal undu Avaigalil idhu ondru Female Part Thendral kaatril malarkoottam aadumoru Aattam paarkka azhagoottum Seerum puyalil mugam thottram maari Idhazh vaattam adaindhu thuyar oottum Female Part Kannukku virundhaagum kavalaikku marundhaagum Menmai konda penmai thannai aanmai Adhan unmai kandu pottruvadhu nanmai Haaa..aa…aa…aahaaa… Female Part Attangal pal undu Avaigalil idhu ondru Female Part Konjum thalaivan thirutholai thazhuvum Malarmaalai tharaiyil vizhalaamaa Koyil deiva silai thannai vaasarpadi Munnae midhikka vidalaama Female Part Vandhadhu oru paadhai povadhu oru paadhai Indru kanda paadhai thunbha paadhai Idhai enni enni yengugiraal paedhai Haaa..aa…aa…aahaaa… Female Part Attangal pal undu Avaigalil idhu ondru Attangal pal undu Avaigalil idhu ondru
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பெண் : ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று தோற்றத்தில் தெரிவது ஒன்று மனத் துடிப்பில் இருப்பது ஒன்று மனத் துடிப்பில் இருப்பது ஒன்று... பெண் : ஹா.....ஆஆ.... ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று பெண் : தென்றல் காற்றில் மலர்க்கூட்டம் ஆடுமொரு ஆட்டம் பார்க்க அழகூட்டும் சீறும் புயலில் முகம் தோற்றம் மாறி இதழ் வாட்டமடைந்து துயரூட்டும் பெண் : கண்ணுக்கு விருந்தாகும் கவலைக்கு மருந்தாகும் மென்மை கொண்ட பெண்மை தன்னை ஆண்மை அதன் உண்மை கண்டு போற்றுவது நன்மை ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ் பெண் : ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று பெண் : கொஞ்சும் தலைவன் திருத்தோளை தழுவும் மலர்மாலை தரையில் விழலாமா கோயில் தெய்வ சிலை தன்னை வாசற்படி முன்னே மிதிக்க விடலாமா பெண் : வந்தது ஒரு பாதை போவது ஒரு பாதை இன்று கண்ட பாதை துன்ப பாதை இதை எண்ணி எண்ணி ஏங்குகிறாள் பேதை ஆஆஆஆஆஆஹ் ஆஆஆஆஆஹ் பெண் : ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று ஆட்டங்கள் பல உண்டு அவைகளில் இது ஒன்று
Song information
Singer: S. Janaki
Music by: T. G. Lingappa
Release information: From Kadavul Mama (1974) · Singer: S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kadavul Mama
- Composer: T. G. Lingappa