Roman script

Singers : Bharathwaj and Subhiksha

Music by : Bharathwaj

Male Part

Aasai oviyam pesum oviyam

Unai varaiyavendumbadi varuvaayaa

Oviyam varaiya unnidam irundhu

Varnangal konjam tharuvaayaa

Female Part

Kai viral enbadhu thoorigaiyaanaal

Kaagidhamaagavum varuvenae

Varngangal enna nee vandhukkettaal

Uyirai vazhiththu tharuvenae

Male Part

Adadaa adadaa ulagathil illai

Evanum idhupol varaindhadhumillai

Kaadhaliyae nee nirangalin pillai

Kaadhaliyae nee nirangalin pillai

Male Part

Aasai oviyam pesum oviyam

Unai varaiyavendumbadi varuvaayaa

Chorus

Hmm hmm hmmm mmm mmm

Hmm hmm hmmm mmm mmm

Male Part

Vinnai vizhungiya

Vizhigalil irundhu

Neela varnam tharuvaayaa

Female Part

Neela varnam

Irundha vizhiyil

Neeyae vizhundhuviduvaayaa

Male Part

Udhadugal ennum

Sevvandhi nilathil

Sivappu varnam tharuvaayaa

Female Part

Udhattil varnam

Edukkum neram

Udambae sivakka vaippaayaa

Male Part

Koondhal nelivil

Koocham marandhu

Karuppu varnam tharuvaayaa

Female Part

Kondhalin nirathil

Kann theriyaamal

Neeyae tholaindhu poavaayaa

Male Part

Adadaa adadaa ulagathil illai

Evanum idhupol varaindhadhumillai

Ennavalae nee oviya cholai

Male Part

Magarandham oorum

Meniyil irundhu

Manjal varnam tharuvaayaa

Female Part

Manjal varnam

Pongum meniyil

Neeyae karaindhuviduvaayaa

Male Part

Ichchai nilavae

Pachchai narambil

Pasumai varnam tharuvaayaa

Female Part

Narambu vazhiyae

Kasiya kasiya

Kaadhal vazhiya cheivaayaa

Male Part

Valaiyum vayasae

Manasil irundhu

Vvellai varnam tharuvaayaa

Female Part

Vellai varnam

Irukkum manasai

Kollaiyadiththu chelvaayaa

Male Part

Adadaa adadaa ulagathil illai

Evanum idhupol varaindhadhumillai

Iniyavalae nee azhagukku ellai

Male Part

Aasai oviyam pesum oviyam

Unai varaiyavendumbadi varuvaayaa

தமிழ்

பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் சுபிக்ஷா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : ஆசை ஓவியம் பேசும் ஓவியம்

உன்னை வரையவேண்டும்படி வருவாயா

ஓவியம் வரைய உன்னிடம் இருந்து

வர்ணங்கள் கொஞ்சம் தருவாயா

பெண் : கை விரல் என்பது தூரிகையானால்

காய்கிதமாகவும் வருவேனே

வர்ணங்கள் என்ன நீ வந்துக்கேட்டால்

உயிரை வழித்து தருவேனே

ஆண் : அடடா அடடா உலகத்தில் இல்லை

எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை

காதலியே நீ நிறங்களின் பிள்ளை

காதலியே நீ நிறங்களின் பிள்ளை

ஆண் : ஆசை ஓவியம் பேசும் ஓவியம்

உன்னை வரையவேண்டும்படி வருவாயா

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : விண்ணை விழுங்கிய

விழிகளில் இருந்து

நீல வர்ணம் தருவாயா

பெண் : நீல வர்ணம்

இருந்த விழியில்

நீயே விழுந்து விடுவாயா

ஆண் : உதடுகள் என்னும்

செவ்வந்தி நிலத்தில்

சிவப்பு வர்ணம் தருவாயா

பெண் : உதட்டில் வர்ணம்

எதுக்கும் நேரம்

உடம்பே சிவக்க வைப்பாயா

ஆண் : கூந்தல் நெளிவில்

கூச்சம் மறந்து

கருப்பு வர்ணம் தருவாயா

பெண் : கூந்தலின் நிறத்தில்

கண் தெரியாமல்

நீயே தொலைந்து போவாயா

ஆண் : அடடா அடடா உலகத்தில் இல்லை

எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை

என்னவளே நீ ஓவிய சோலை

ஆண் : மகரந்தம் ஊறும்

மேனியில் இருந்து

மஞ்சள் வர்ணம் தருவாயா

பெண் : மஞ்சள் வர்ணம்

பொங்கும் மேனியில்

நீயே கரைந்து விடுவாயா

ஆண் : இச்சை நிலவே

பச்சை நரம்பில்

பசுமை வர்ணம் தருவாயா

பெண் : நரம்பு வழியே

கசிய கசிய

காதல் வழிய செய்வாயா

ஆண் : வளையும் வயசே

மனசில் இருந்து

வெள்ளை வர்ணம் தருவாயா

பெண் : வெள்ளை வர்ணம்

இருக்கும் மனசை

கொள்ளையடித்து செல்வாயா

ஆண் : அடடா அடடா உலகத்தில் இல்லை

எவனும் இதுபோல் வரைந்ததுமில்லை

இனியவளே நீ அழகுக்கு எல்லை

ஆண் : ஆசை ஓவியம் பேசும் ஓவியம்

உன்னை வரையவேண்டும்படி வருவாயா

Song information

Singers: Bharathwaj and Subhiksha

Music by: Bharathwaj

Release information: From Manjal Veyil (2009) · Lyricist: Pa.Vijay

Explore this song