Roman script
Singer : Balaram P Iyer Music by : Harshavardhan Rameshwar Lyrics by : Karthik Netha Male Part Poove poonjiragae thaalaattavaa Paasam pothumadi paaraattavaa Neril kaanum vaazhvin pagalae Maarbil aadum thaayin nizhalae Male Part Vazhippokkanai polae dhinam Naan alainthenae Oru thevadhaiyaalae Siru koodadaindhenae Varamaai kidaitha muzhumaiyae Enaithaan valarkkum kuzhanthaiye Male Chorus : Aariraaro aaraaro Aadi varum poonthaero Yenthi varum dheebam allo Male Chorus : Aariraaro aaraaro Koodi varum naalallo Nee enakku thaalelelo Male Part Vidiyaamal pona vaazhvil vandha Velicham neeyadi Kadigaara neram meeri vandha Kaalam nee Puriyaatha vaazhvin kelvi adhan Vidaigal neeyadi Mudiyaamal neelum inbam adhan Paalam nee Male Part Pala kaalam thudithenae Vali kooraamalae Vizhi neerin perum ootrilae Siru poo poothathae Paradhesam ponadhae Panangaasum serndhadhae Oru eeramaana paarvai vandhu Thaalaattudhae Male Part Vazhippokkanai polae dhinam
Naan alainthenae Oru thevadhaiyaalae Siru koodadaindhenae Varamaai kidaitha muzhumaiyae Enaithaan valarkkum kuzhanthaiye Male Chorus : Aariraaro aaraaro Aadi varum poonthaero Yenthi varum dheebam allo Male Chorus : Aariraaro aaraaro Koodi varum naalallo Nee enakku thaalelelo Male Part Palanooru kaalam vaazha Siru paarvai podhumae Siragedhum thevai illai Kurunagai podhum Peridhaaga aasai illai Unakkaaga vaazhanum Unai karuvil sumanthu paarkka Siru varam venum Male Part Uyir theeyae maru thaayae Unai kaappaatruven Puyal melae nadai pottu Siru poo neettuven Idhu podhum podhumae Oli maarbil aadudhae Avathaaram ondru valarndhu nindru Appaangudhae Male Part Enai oor ethirththaalum Vidhi thaan thaduththaalum Un theenjudar paarvai Enai noga vidaadhae Varamaai kidaitha muzhumaiyae Enaithaan valarkkum kuzhanthaiye Chorus Aariraaro aaraaro Aadi varum poonthaero Yenthi varum dheebam allo Chorus Aariraaro aaraaro Koodi varum naalallo Nee enakku thaalelelo
தமிழ்
பாடகர் : பலராம் பி . ஐயர் இசை அமைப்பாளர் : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : பூவே பூஞ்சிறகே தாலாட்டவா பாசம் போதுமடி பாராட்டவா நேரில் காணும் வாழ்வின் பகலே மார்பில் ஆடும் தாயின் நிழலே ஆண் : வழிப்போக்கனை போலே தினம் நான் அலைந்தேனே ஒரு தேவதையாலே சிறு கூடடைந்தேனே வரமாய் கிடைத்த முழுமையே எனை தான் வளர்க்கும் குழந்தையே குழு : ஆரிரரோ ஆராரோ ஆடி வரும் பூந்தேரோ ஏந்தி வரும் தீபம் அல்லோ குழு : ஆரிரரோ ஆராரோ கூடி வரும் நாளலோ நீ எனக்கு தாலேலேலோ ஆண் : விடியாமல் போன வாழ்வில் வந்த வெளிச்சம் நீயடி கடிகார நேரம் மீறி வந்த காலம் நீ புரியாத வாழ்வின் கேள்வி அதன் விடைகள் நீயடி முடியாமல் நீளும் இன்பம் அதன் பாலம் நீ ஆண் : பல காலம் துடித்தேனே வலி கூறாமலே விழி நீரின் பெரும் ஊற்றிலே சிறு பூ பூத்ததே பரதேசம் போனதே பணங்காசும் சேர்ந்ததே ஒரு ஈரமான பார்வை வந்து தாலாட்டுதே ஆண் : வழிப்போக்கனை போலே தினம் நான் அலைந்தேனே ஒரு தேவதையாலே சிறு கூடடைந்தேனே வரமாய் கிடைத்த முழுமையே எனை தான் வளர்க்கும் குழந்தையே குழு : ஆரிரரோ ஆராரோ ஆடி வரும் பூந்தேரோ ஏந்தி வந்த வானம் அல்லோ குழு : ஆரிரரோ ஆராரோ ஓடி வரும் தேனாறோ கூடி வந்த வாழ்வும் அல்லோ ஆண் : பல நூறு காலம் வாழ சிறு பார்வை போதுமே சிறகேதும் தேவை இல்லை குறுநகை போதும் பெரிதாக ஆசை இல்லை உனக்காக வாழணும் உனை கருவில் சுமந்து பார்க்க சிறு வரம் வேணும் ஆண் : உயிர் தீயே மறு தாயே உனை காப்பாற்றுவேன் புயல் மேலே நடை போட்டு சிறு பூ நீட்டுவேன் இது போதும் போதுமே ஒளி மார்பில் ஆடுதே அவதாரம் ஒன்று வளர்ந்து நின்று அப்பாங்குதே ஆண் : எனை ஊர் எதிர்த்தாலும் விதி தான் தடுத்தாலும் உன் தீஞ்சுடர் பார்வை எனை நோக விடாதே வரமாய் கிடைத்த முழுமையே எனை தான் வளர்க்கும் குழந்தையே குழு : ஆரிரரோ ஆராரோ ஆடி வரும் பூந்தேரோ ஏந்தி வந்த வானம் அல்லோ குழு : ஆரிரரோ ஆராரோ ஓடி வரும் தேனாறோ கூடி வந்த வாழ்வும் அல்லோ
Song information
Singer: Balaram P Iyer
Music by: Harshavardhan Rameshwar
Lyrics by: Karthik Netha
Release information: From Jothi – 2022 Film (2022) · Singer: Balaram P Iyer · Lyricist: Karthik Netha · Music: Harshavardhan Rameshwar
Explore this song
- Singer: Balaram P Iyer
- Film / album: Jothi – 2022 Film
- Composer: Harshavardhan Rameshwar
- Lyricist: Karthik Netha