Roman script
Singer : Vani Jairam Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Female Part Yaengum deivam angae Thoongum selvam ingae Oru niyaayam oru dharmam Idaiyil naan engae Female Part Yaengum deivam angae Thoongum selvam ingae Female Part Thoondilo irandu pakkam Thudikkavo meenai vaiththaan Paasamo irandu pakkam Padhaikkavo nenjai vaiththaan Female Part Kanneerin vellam oru ullam Adhilae sellum Engae payanam engae mudiyum Angae thunaithaan yaaro Female Part Yaengum deivam angae Thoongum selvam ingae Oru niyaayam oru dharmam Idaiyil naan engae Female Part Thaaliyum nilaikka vendum Thaaimaiyum vaazhvendum Vendidum irandil ondru Vilaginaal enna undu Female Part Thaalaattum pillai manam Vellai adhuvaa thollai Kattil perithaa thottil perithaa Endraal padhilthaan enna Female Part Yaengum deivam angae Thoongum selvam ingae Oru niyaayam oru dharmam Idaiyil naan engae….
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே.... பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே பெண் : தூண்டிலோ இரண்டு பக்கம் துடிக்கவோ மீனை வைத்தான் பாசமோ இரண்டு பக்கம் பதைக்கவோ நெஞ்சை வைத்தான் பெண் : கண்ணீரின் வெள்ளம் ஒரு உள்ளம் அதிலே செல்லும் எங்கே பயணம் எங்கே முடியும் அங்கே துணை தான் யாரோ....... பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே.... பெண் : தாலியும் நிலைக்க வேண்டும் தாய்மையும் வாழவேண்டும் வேண்டிடும் இரண்டில் ஒன்று விலகினால் என்ன உண்டு பெண் : தாலாட்டும் பிள்ளை மனம் வெள்ளை அதுவா தொல்லை கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா என்றால் பதில் தான் என்ன....... பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே தூங்கும் செல்வம் இங்கே ஒரு நியாயம் ஒரு தர்மம் இடையில் நான் எங்கே....
Song information
Singer: Vani Jairam
Music by: Ilayaraja
Lyrics by: Pulamaipithan
Release information: From Sonnathu Neethana (1978) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Ilayaraja
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Sonnathu Neethana
- Composer: Ilayaraja
- Lyricist: Pulamaipithan