Roman script
Singers : Naresh Iyer and Rita Music by : Ganesh Raghavendra Male Part Villadhi villi Endhan pakkam vandhaai Thoomgaamal thupparinthu Thozhi aanaai Male Part Nanjulla kallan endrae Ennam kondaai Nenjulla nallan endru Kandarinthaai Sidu sidu vena seenditaai Sadugudu ena aaditaai Para paravena dhinamum porittaai Male Part Oh en thiramai vaasithaai En thanimai nesithaai Dhisai maariya thendral pola nindraai Female Part Thaduppanai yedhum illaa Nadhi thodar naanthaanae Niraayudhan unnai kandu Satrae nindrenae Female Part Adaavadi vaadham seiyum Thadaaladi penn thaanae Alaudin bootham pola Anbaai poothenae Female Part Vazhi thavariya sogam Viraivinil athu theerum Unai maranthu Undhan vizhigal thoongumae Oh nizhal ulagam pothum Ninai azhaikkum kaalam Irulai vittu veliyae varuvaai neeyae Male Part Villadhi villi Endhan pakkam vandhaai Thoomgaamal thupparinthu Thozhi aanaai Chorus ………………………….. Male Part Inimaigal yedhum illaa Thunigaram naanthaanae Manogari undhan natpil Mavvam kandenae Male Part Alavuthal yedhum indri Ulaa varum aanthaanae Kalebara kanni undhan Parivil sarinthenae Male Part Thalai maraigira ennil Kurai ulla oru nenjil Mudhal mudhalaai maatram ondru Thondruthae Oh thariketta oru vaanam Tharai erangidum neram Aravanaikkum boomi paadhai neeyae Male Part Villadhi villi Endhan pakkam vandhaai Pakkam vandhaai Thoomgaamal thupparinthu Thozhi aanaai Male Part Nanjulla kallan endrae Ennam kondaai Nenjulla nallan endru Kandarinthaai Female Part Vegu naalaai kuri vaithen Viral thadayangal sodhithen Unai siraiyida valigal theditten Oh un saridhai vaasithen Un thanimai nesithen Unakkena sila kelvigal Parisaai thandhen
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் ரீட்டா இசையமைப்பாளர் : கணேஷ் ராகவேந்திரா ஆண் : வில்லாதி வில்லி எந்தன் பக்கம் வந்தாய் தூங்காமல் துப்பறிந்து தோழி ஆனாய் ஆண் : நஞ்சுள்ள கள்ளன் என்றே எண்ணம் கொண்டாய் நெஞ்சுள்ள நல்லன் என்று கண்டறிந்தாய் சிடுசிடுவென சீண்டிட்டாய் சடுகுடு என ஆடிட்டாய் பரபரவென தினமும் போரிட்டாய் ஆண் : ஓ என் திறமை வாசித்தாய் என் தனிமை நேசித்தாய் திசை மாறிய தென்றல் போல நின்றாய் பெண் : தடுப்பணை ஏதும் இல்லா நதி தொடர் நான்தானே நிராயுதன் உன்னை கண்டு சற்றே நின்றேனே பெண் : அடாவடி வாதம் செய்யும் தடாலடி பெண்தானே அலாவுதீன் பூதம் போல அன்பாய் பூத்தேனே பெண் : வழி தவறிய சோகம் விரைவினில் அது தீரும் உன்னை மறந்து உந்தன் விழிகள் தூங்குமே ஓ நிழல் உலகம் போதும் நினை அழைக்கும் காலம் இருளை விட்டு வெளியே வருவாய் நீயே ஆண் : வில்லாதி வில்லி எந்தன் பக்கம் வந்தாய் தூங்காமல் துப்பறிந்து தோழி ஆனாய் குழு : ............................... ஆண் : இனிமைகள் ஏதும் இல்லா துணிகரம் நான்தானே மனோகரி உந்தன் நட்பில் மவ்வம் கண்டேனே ஆண் : அளாவுதல் ஏதுமின்றி உலா வரும் ஆண்தானே களேபரகன்னி உந்தன் பரிவில் சரிந்தேன்னே ஆண் : தலை மறைகிற என்னில் குறை உள்ள ஒரு நெஞ்சில் முதல் முதலாய் மாற்றம் ஒன்று தோன்றுதே ஓ தரிக்கெட்ட ஒரு வானம் தரை இறங்கிடும் நேரம் அரவணைக்கும் பூமி பாதை நீயே ஆண் : வில்லாதி வில்லி எந்தன் பக்கம் வந்தாய் தூங்காமல் துப்பறிந்து தோழி ஆனாய் ஆண் : நஞ்சுள்ள கள்ளன் என்றே எண்ணம் கொண்டாய் நெஞ்சுள்ள நல்லன் என்று கண்டறிந்தாய் பெண் : வெகு நாளாய் குறி வைத்தேன் விரல் தடயங்கள் சோதித்தேன் உன்னை சிறையிட வழிகள் தேடினேன் ஓ உன் சரிதை வாசித்தேன் உன் தனிமை நேசித்தேன் உனக்கென சில கேள்விகள் பரிசாய் தந்தேன்
Song information
Singers: Naresh Iyer and Rita
Music by: Ganesh Raghavendra
Release information: From Asura Guru (2019) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Naresh Iyer and Rita
- Film / album: Asura Guru
- Composer: Ganesh Raghavendra