தமிழ்

பெண்: ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
ஆண்: என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா
ஆண்: உன்னை மழை என்பதா?
இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம் நிலம் காற்று
நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
பெண்: என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா
பெண்: ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆண்: நதியாக நீயும்
இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை
கரையாகிறேன்
பெண்: இரவாக நீயும்
நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை
உயிர் வாழ்கிறேன்
ஆண்: முதல் நாள் என் மனதில்
விதையாய் நீ இருந்தாய்
மறுநாள் பார்கையிலே
வனமாய் மாறிவிட்டாய்
நாடித் துடிப்போடு
நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்
பெண்: என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா
பெண்: பூலோகம் ஓர் நாள்
காற்றின்றி போனால்
எந்தன் உயிர்
உந்தன் மூச்சு காற்றாகுமே
ஆண்: ஆகாயம் ஓர்நாள்
விடியாமல் போனால்
எந்தன் ஜீவன்
உந்தன் கையில் விளக்காகுமே
பெண்: அன்பே நான் இருந்தேன்
வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய்
பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால்
அதில் நானே திரி ஆகிறேன்
தினம் திரியாகிறேன்
ஆண்: என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா
ஆண்: உன்னை மழை என்பதா?
இல்லை தீ என்பதா?
அந்த ஆகாயம்
நிலம் காற்று நீ என்பதா?
உன்னை நான் என்பதா?
பெண்: என்னைத் தாலாட்டும்
சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும்
பொன் ஊஞ்சல் நான் அல்லவா

Song details

படம்: உன்னை நினைத்து (2002)

இசை: சிற்பி

பாடலாசிரியர்: பா. விஜய்

பாடியவர்கள்: உன்னி மேனன், சுஜாதா

Album: உன்னை நினைத்து

Song video

Watch on YouTube