Roman script

Singer : Shankar Mahadevan
Music by : Augaath
Lyrics by : Vairamuthu
Male Part
Unnai paarthu ulagam kuraikkum
Thannanbikkai thalara vidathae
Rettaai pechu pesum ulagam
Mirattum thambhi mirandu vidathae (Dialogue)
Male Part
Ovvoru vaayilum ottrai naakku
Ulagin vaayil rettai naakku
Enakku nerndha izhamozhi ellaam
Unaku solgiren ullathil ezhuthu
Ezhuthu ehzuthu ezhuthu
Ezhuthu ehzuthu ezhuthu
Male Part
Innisai thamizhai elimai seidhen
Ilakkiyam illai laegiyam endrathu
Thirai paattukkul sendhamizh seidhen
Parimaelazhagarai varasol endrathu (Dialogue)
Male Part
Ho kurunthogai kamban kotti moozhginen
Kundu sattiyil kudhirai endrathu
Eliyat neruda ellaam sonnen
Thiramai ellam thirudiya thendrathu
Thirudiya thendrathu thirudiya thendrathu
Thirudiya thendrathu thirudiya thendrathu
Male Part
Appadi irundhaal adhuvum thappu
Ippadi irundhaal idhuvum thappu
Kaththum naaikku kaaranam vendam
Than nizhal paarthu thanae kuraikkum kuraikkum
Male Part
Eliya thottramae iyalbena irundhen
Vaduga patti vazhiyudhu endrathu
Azhagaai nanaum aadaigal konden
Kazhuthaikkuedharkku kanmai endrathu
Male Part
Maedaiyil kaalmel kaalittamarndhen
Paditha thimirthaan panivillai endrathu
Moothavar vandhadhum mudhalil ezhundhen
Kavigan nalla kaakka endrathu (Dialogue)
Male Part
Appadi irundhaal adhuvum thappu
Ippadi irundhaal idhuvum thappu
Kaththum naaikku kaaranam vendam
Than nizhal paarthu thanae kuraikkum kuraikkum
Male Part
Mattravar soozhchiyaal mannil vizhunthen
Puthi kozhuthavan pudhainthan endrathu
Moochu piditha mutti mulaithen
Thandhirakaaran thalli nil endrathu(Dialogue)
Male Part
Pagaiayi kandu paiya nagarndhen
Payandhu vittaan paavam endrathu
Modhi midhithu mugathil umildhen
Vilangi vittadha mirugam endrathu
Male Part
Uyarndhor perumai uvandhu pugazhndhen
Kaadhil poo vaikkiraan kavanam endrathu
Viral nagatahlavu vimarsanam seidhen
Arivaal edukkiraan aabathu endrathu (Dialogue)
Male Part
Punathil porulil pattattru irundhen
Varumaiyin vindhil pirandhavan endrathu
Ennai theithu mandapam kattinen
Pulavan illai poorshva endrathu (Dialogue)
Male Part
Sondha peril thuli nilam illai
Ivana mannin maindhan endrathu
Thennai marangal thedi vaanginen
Pannaiyaar aanaan paavaalan endrathu
Male Part
Kayavar kettaal kasu maruthaen
Karakka mudiyaadha kanjan endrathu
Unmai irundhaal urupporul koduthen
Udhiri thiriyum oodhaari endrathu
Male Part
Appadi irundhaal adhuvum thappu
Ippadi irundhaal idhuvum thappu
Kaththum naaikku kaaranam vendaam
Than nizhal paarthu thaanae kuraikkum kuraikkum
Male Part
Mangaiyaridaiyae maunam kaathen
Kavingen endra karvar endrathu
Pengal silarudan pesa thodanginen
Kangalai kavani kaamam endrathu (Dialogue)
Male Part
Hmm virudhugal kaluthil veezha kanden
Kuruttu adhirstam koodiya thendrathu
Mendum meednum virudhugal konden
Dilliyil yaaraiyoo theriyum endrathu
Male Part
Dhisaigal thorum thaedhi koduthen
Aiyoo pugalukku alaigiraan endrathu
Nera kuaraivu niruthi konden
Kanakku paarkkiraan kavingan endrathu
Male Part
Appadi irundhaal adhuvum thappu
Ippadi irundhaal idhuvum thappu
Kaththum naaikku kaaranam vendaam
Than nizhal paarthu thaanae kuraikkum kuraikkum
Male Part
Ulagin vaaiyai thaithidu alladhu
Irandu sevigalai irukki moodidu
Ulagin vaaiyai thaipathu kadinam
Undhan sevigal mooduthal sulabam (Dialogue)

தமிழ்

பாடகர் : ஷங்கர் மஹாதேவன்
வசனம் : வைரமுத்து
இசை அமைப்பாளர் : அவ்காத்
பாடல் ஆசிரியர் : வைரமுத்து
ஆண் : உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
ரெட்டைப் பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே (வசனம் )
ஆண் : ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் ரெட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது
எழுது எழுது எழுது
எழுது எழுது எழுது
ஆண் : இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது (வசனம் )
ஆண் : ஹோ
குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது
திருடிய தென்றது திருடிய தென்றது
திருடிய தென்றது திருடிய தென்றது
ஆண் : அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன்நிழல் பார்த்து தானே குரைக்கும் குரைக்கும்
ஆண் : எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது
ஆண் : மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்தததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல காக்கா என்றது (வசனம் )
ஆண் : அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன்நிழல் பார்த்து தானே குரைக்கும்
குரைக்கும்
ஆண் : மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக்காரன் தள்ளி நில் என்றது (வசனம் )
ஆண் : பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்து விட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது
ஆண் : உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில்பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல் நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது (வசனம் )
ஆண் : புணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது (வசனம் )
ஆண் : சொந்த ஊரில் துளி நிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது
ஆண் : கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாத கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது
ஆண் : அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி ருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன்நிழல் பார்த்து தானே குரைக்கும் குரைக்கும்
ஆண் : மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது (வசனம் )
ஆண் : ஹ்ம்ம் விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டில்லியில் யாரையோ தெரியும் என்றது
ஆண் : திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக்கு அலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது
ஆண் : அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும் குரைக்கும்
ஆண் : உலகின் வாயைத் தைத்திடு அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம் (வசனம் )

Song details

Music by: Augaath

Lyrics by: Vairamuthu

Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Shankar Mahadevan · Lyricist: Vairamuthu · Music: Augaath

Song video

Watch on YouTube