Roman script
Singer : Hariharan Music by : A. R. Rahman Male Part Suttum vizhichchudardhaan Kannammaa Sooriya chandhiraroo Vatta kariyavizhi kannammaa Vaanak karumai kolloo Male Part Pattu karuneela pudavai Padhiththa nal vayiram Natta nadu nisiyil theriyum Natchaththirangaladi Male Part Solai malar oliyooo Unadhu sundhara punnagaidhaan…aaan Neela kadalalaiyae Unadhu nenjin alaigaladi…ee… Male Part Kola kuyil osai Unadhu kuralin inimaiyadi Vaalai kumariyadi kannammaa Maruva kaadhal konden Male Part Saaththiram pesugiraai Kannamaa Saaththiram yedhukkadi Aaththiram kondavarkkae kannamaa Saaththiram undoodi Male Part Mooththavar sammadhiyil Vadhuvai Muraigal pinbu seivom Kaaththiruppenodi idhu paar Kannaththu muththam ondru
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ ஆண் : பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ ஆண் : சோலை மலரொளியோ உனது சுந்தரப் புன்னகை தான் நீலக் கடலலையே உனது நெஞ்சின் அலைகளடீ ஆண் : கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன் ஆண் : சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரம் உண்டோடி ஆண் : மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம் காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று
Song information
Singer: Hariharan
Music by: A. R. Rahman
Release information: From Kandukondain Kandukondain (2000) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Kandukondain Kandukondain
- Composer: A. R. Rahman