Roman script
Singer : Shreya Ghoshal Music by : D. Imman Female Part Sahaayanae sahaayanae nenjukkul nee muzhaithaai Sahaayanae sahaayanae ennai nee yen parithaai Un ennangal thaakki en kannangal pookka Nee vayathukku vaasam thanthaai Female Part Sahaayanae sahaayanae nenjukkul nee muzhaithaai Female Part Oru murai un perai udhadugal sonnaalae Pasi indri povathenna Pala murai sonnaalum urangida ennaamal Vizhi rendum ketpathenna Thavari vizhuntha porul pol Enai eduthaayada Thavanai muraiyil unai naan Sirai pidithenada Pillai polae ennai kaiyil yenthu Ellai yethum illai anbil neenthu neenthu Female Part Sahaayanae sahaayanae Female Part Kanavilum kaanaatha vagaiyinil un thottram Enakkullae koochal poda Idhu varai ketkaatha isai ena un pechu Alavilla aattam poda Iranthu iranthu pirakkum nilai ithu thaanada Magizhnthu magizhnthu marikkum varam koduthaayada Kalla paarvai ennai kothi thinna Enna yethu endru ullam enna enna Female Part Sahaayanae sahaayanae nenjukkul nee muzhaithaai Sahaayanae sahaayanae ennai nee yen parithaai
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய் உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூக்க நீ வயதுக்கு வாசம் தந்தாய் பெண் : சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் பெண் : ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசி இன்றி போவதென்ன பல முறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல் விழி ரெண்டும் கேட்பதென்ன தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா பிள்ளை போலே என்னை கையில் ஏந்து எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து பெண் : சகாயனே சகாயனே பெண் : கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல் போட இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு அளவில்லா ஆட்டம் போட இறந்து இறந்து பிறக்கும் நிலை இதுதானடா மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா கள்ள பார்வை என்னை கொத்தி தின்ன என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண பெண் : சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய் சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
Song information
Singer: Shreya Ghoshal
Music by: D. Imman
Release information: From Saattai (2012) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Saattai
- Composer: D. Imman