Roman script
Singers : Rakshitha Suresh and Ananthu Music by : Moses Lyrics by : Kadhir Mozhi Female Part Otha kannula thoosiya pola Rendu kannulaiyum kuththuraiyae Kallu erinja kolaththu thanniyaa Enna kalanga nee vaikkuraiyae Female Part Kaththi munaiyilae naththaiyaa nimisham Nagarnthu nagarntha poguthunga Kannu kuzhiyila vizhuntha thanneer samuththiramaa maaruthunga Female Part Yuththamaa raththamaa nithamaa venaa Moththamaa naan thaaraen kann muzhidaa Kannaadi thottikkul meenaaga vaazhntha Kadala kaatturaen enthiridaa Female Part Vedha manalaa iruntha manam Potha manalaa izhukkuthadaa Vedha manalaa iruntha manam Potha manalaa izhukkuthadaa Female Part Vaanaththa urasum pattathukku Tharaiyila oru pidi undu Kallaththanam seiyum Unnil naanum kollai pona Nodi kandukittaen Female Part Vaarthaigal ellaam thaandi ulla Mounaththil oru paashai undu Kallippoo kalladi thaangikittu Kaayaththil sirikkum katrukkollu Female Part Sila neram enakkaga Pala neram unakkaga
Inimelum namakkaaga vaazhnthidanum Veyilodum mazhaiyodum Paniyodum kulirodum Nizhalaaga enkooda vanthidanum Female Part Vazhipariyaa vizhipariyaa Theriyala onnum piriyalayae Kadavulthaan kandathumilla Kandukondaen Naan kadhalukkulla Male Part Kadhalukkullae Male Part Kaayaththa kothum kaakkaiyena Kaalangal ennai thoraththuthae Theevaaga enna nee soozhntha pinnae Aaraatha kaayangal aariduthae Eththanai thunbangal vanthathundu Thaayinmadi theda thonalaiyae Male Part Intha nodi neeyum thaayumadi Paththu viral enthan thoppul kodi Kalankaththa sumanthaalum Oli veesa marukkaatha Nilavaaga en vaazhvil vanthaayadi Male Part Eravaana elipola Enakkulla neeyodi En thookkam ippothu kalaiththaayadi Male Part Thanni vandiyaa irunthavana Thallivida nee ninaikkalaiyae Tharikettuthaan thirinjavana Onakkullathaan karaikiraiyae Female Part Otha kannula thoosiya pola Rendu kannulaiyum kuththuraiyae Kallu erinja kolaththu thanniyaa Enna kalanga nee vaikkuraiyae
தமிழ்
பாடகர்கள் : ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அனந்து இசையமைப்பாளர் : மோசஸ் பாடலாசிரியர் : கதிர் மொழி பெண் : ஒத்த கண்ணுல தூசிய போல ரெண்டு கண்ணுலையும் குத்துறையே கல்லு எரிஞ்ச கொளத்து தண்ணியா என்ன கலங்க நீ வைக்குறையே பெண் : கத்தி முனையிலே நத்தையா நிமிஷம் நகர்ந்து நகர்ந்த போகுதுங்க கண்ணு குழியில விழுந்த தண்ணீர் சமுத்திரமா மாறுதுங்க பெண் : யுத்தமா ரத்தமா நித்தமா வேணா மொத்தமா நான் தாரேன் கண் முழிடா கண்ணாடி தொட்டிக்குள் மீனாக வாழ்ந்த கடல காட்டுறேன் எந்திரிடா பெண் : வெத மணலா இருந்த மனம் பொத மணலா இழுக்குதடா வெத மணலா இருந்த மனம் பொத மணலா இழுக்குதடா பெண் : வானத்த உரசும் பட்டத்துக்கு தரையில ஒரு பிடி உண்டு கள்ளத்தனம் செய்யும் உன்னில் நானும் கொள்ளை போன நொடி கண்டுகிட்டேன் பெண் : வார்த்தைகள் எல்லாம் தாண்டி உள்ள மௌனத்தில் ஒரு பாஷை உண்டு கள்ளிப்பூ கல்லடி தாங்கிகிட்டு காயத்தில் சிரிக்கும் கற்றுக்கொள்ளு பெண் : சில நேரம் எனக்காக பல நேரம் உனக்காக இனிமேலும் நமக்காக வாழ்ந்திடனும் வெயிலோடும் மழையோடும் பனியோடும் குளிரோடும் நிழலாக என்கூட வந்திடனும் பெண் : வழிபறியா விழிபறியா தெரியல ஒன்னும் புரியலயே கடவுள்தான் கண்டதுமில்ல கண்டுகொண்டேன் நான் காதலுக்குள்ள ஆண் : காதலுக்குள்ளே..... ஆண் : காயத்த கொத்தும் காக்கையென காலங்கள் என்னை தொரத்துதே தீவாக என்ன நீ சூழ்ந்த பின்னே ஆறாத காயங்கள் ஆரிடுதே எத்தனை துன்பங்கள் வந்ததுண்டு தாயின்மடி தேட தோணலையே ஆண் : இந்த நொடி நீயும் தாயுமடி பத்து விரல் எந்தன் தொப்புள் கொடி கலங்கத்த சுமந்தாலும் ஒளி வீச மறுக்காத நிலவாக என் வாழ்வில் வந்தாயடி ஆண் : எரவான எலிபோல எனக்குள்ள நீயோடி என் தூக்கம் இப்போது கலைத்தாயடி ஆண் : தண்ணி வண்டியா இருந்தவன தள்ளிவிட நீ நினைக்கலையே தறிகெட்டுதான் திரிஞ்சவன ஒனக்குள்ளதான் கரைக்கிரையே பெண் : ஒத்த கண்ணுல தூசிய போல ரெண்டு கண்ணுலையும் குத்துறையே கல்லு எரிஞ்ச கொளத்து தண்ணியா என்ன கலங்க நீ வைக்குறையே
Song information
Singers: Rakshitha Suresh and Ananthu
Music by: Moses
Lyrics by: Kadhir Mozhi
Release information: From Thanne Vandi (2021) · Singer: Rakshitha Suresh and Ananthu · Lyricist: Kadhirmozhi · Music: Moses
Explore this song
- Singer: Rakshitha Suresh and Ananthu
- Film / album: Thanne Vandi
- Composer: Moses
- Lyricist: Kadhir Mozhi