Roman script
Singers : K. S. Chithra and Vani Jairam Music by : Vijayanand Lyrics by : Vaali Female Part Oruvanukkku oruththiyena Uravu kolla urimai ulla Vannamayil kannagiyum naanae Female Part Silambin mani sithara manam sithara Thalaivan avan thirusabaiyil Nadanamidum maadhaviyum naanae Female Part : Malareduththu kuzhal mudiththu Manavaraiyil karam pidiththa Kula magalum kuna magalum ivalae Female Part Kanigai en per irunthum Kanavar ena oruvar vasam Saranadaintha sarasa magal ivalae Female Part Oruvanukkku oruththiyena Uravu kolla urimai ulla Vannamayil kannagiyum naanae Female Part Naan potta maalai ennaalumae Nee theenda koodaathu podi Naalthorum maalai un kaavalan Vanthaanae en vaasal thedi Female Part Naanangal yaedhum illaathaval Pennalla peyallavo Pasi vantha velai theerkkaathaval Kaniyalla kaayallavo Female Part Aduththavalin kudiththanaththil Idam pidiththal muraiyaa Oru mugaththil iru vizhigal Iruppathenna thavaraa Female Part Enakkenave piranthavandi Female : Idaiyil ennai kalanthavandi Female : Iniyum intha virasamenna Iruvarukkul sarasamenna Female Part Oruvanukkku oruththiyena Uravu kolla urimai ulla Kannin mani rukkumani naanae Female Part Thalaivan radham nadaththa Samar kalaththil vadam pidiththa Vanithai intha bhaamaa enum Azhagu nalar thaanae Female Part Kaiyodu yaenthum pullaanguzhal Adhu pola naan konda sontham Female : Kannaana kannan brinthaavanam Ennaalum bhaamavin bantham Female Part Neeraadum gangai naanallavo En pol neeyaagumo Female : Aanantha vellam naanthaanadi Yamunaikku eedaagumo Female Part Enakkirukkum urimaiyinai Parippathenna muraiyo Female : Oru nadhiyai iru karaiyum Thazhuvuvathu thavaro Female Part Kadal kalantha nadhi idhuthaan Female : Udan inaintha vidhi idhuthaan Female : Iniyum antha mayakkamenna Iruvarukkul nerukkamenna Female Part Oruvanukkku oruththiyena Uravu kolla urimai ulla Paruva magal pommi ivalthaanae Female Part Thalaivan manamarinthu kunamarinthu Malarpadukkai viriththu vaiththa Vadivazhagi vellaiyammaa naanae Female Part Thenpaandi veeran en mannavan Naan mattum kondaadum devan Female : Naanenna solla en nenjilum Neengaamal vaazhgindra jeevan Female Part Naan konjum maeni ennaalumaee Nee konja koodaathadi Female : Un mannan vanthaal ennaalumae Vaasal moodaathadi Female Part Purushan enna palar virumbum Podhuvudamai porulaa Female : Iru manaivi muruganukku Iruppathenna thavaraa Female Part Manitharellaam iravaalla Female : Unairchchiyillaa maramumalla Female : Vilakkavurau ini edharkkau Vilagi vidu vazhakkedharkkau Female Part Oruvanukkku oruththiyena Uravu kolla urimai ulla Mudhal vedu en veeduthaanae Female Part Iravil nilaverikka kuliredukka Iru karaththil aravanaikka Chinna veedu en veeduthaanae Female Part Ulagariya oorariya arunthathiyum thaanariya Samsaaram ennaalum ivalae Female Part Aduththavarum ariyaamal Veeraarkkum theriyaamal Aanantham tharupavalum ivalae Female Part Oruvanukkku oruththiyena Uravu kolla urimai ulla Mudhal veedu en veeduthaanae Female Part {Prabhu…. Female : Anbae…. Female : Prabhu…. Female : Anbae….} (2)
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : விஜயானந்த் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள வண்ணமயில் கண்ணகியும் நானே பெண் : சிலம்பின் மணி சிதற மனம் சிதற தலைவன் அவன் திருச்சபையில் நடனமிடும் மாதவியும் நானே பெண் : மலரெடுத்து குழல் முடித்து மணவறையில் கரம் பிடித்த குல மகளும் குண மகளும் இவளே பெண் : கனிகை என பேர் இருந்தும் கணவர் என ஒருவர் வசம் சரணடைந்த சரச மகள் இவளே பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள வண்ணமயில் கண்ணகியும் நானே பெண் : நான் போட்ட மாலை எந்நாளுமே நீ தீண்டக் கூடாது போடி நாள்தோறும் மாலை உன் காவலன் வந்தானே என் வாசல் தேடி பெண் : நாணங்கள் ஏதும் இல்லாதவள் பெண்ணல்ல பேயல்லவோ பசி வந்த வேளை தீர்க்காதவள் கனியல்ல காயல்லவோ பெண் : அடுத்தவளின் குடித்தனத்தில் இடம் பிடித்தல் முறையா ஒரு முகத்தில் இரு விழிகள் இருப்பதென்ன தவறா பெண் : எனக்கெனவே பிறந்தவன்டி பெண் : இடையில் என்னை கலந்தவன்டி பெண் : இனியும் இந்த விரசமென்ன இருவருக்குள் சரசமென்ன பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள கண்ணின் மணி ருக்குமணி நானே பெண் : தலைவன் ரதம் நடத்த சமர் களத்தில் வடம் பிடித்த வனிதை இந்த பாமா எனும் அழகு மலர் தானே பெண் : கையோடு ஏந்தும் புல்லாங்குழல் அது போல நான் கொண்ட சொந்தம் பெண் : கண்ணான கண்ணன் பிருந்தாவனம் எந்நாளும் பாமாவின் பந்தம் பெண் : நீராடும் கங்கை நானல்லவோ என் போல் நீயாகுமோ பெண் : ஆனந்த வெள்ளம் நான்தானடி யமுனைக்கு ஈடாகுமோ பெண் : எனக்கிருக்கும் உரிமையினை பறிப்பதென்ன முறையோ பெண் : ஒரு நதியை இரு கரையும் தழுவுவது தவறோ பெண் : கடல் கலந்த நதி இதுதான் பெண் : உடன் இணைந்த விதி இதுதான் பெண் : இனியும் அந்த மயக்கமென்ன இருவருக்குள் நெருக்கமென்ன பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள பருவ மகள் பொம்மி இவள்தானே பெண் : தலைவன் மனமறிந்து குணமறிந்து மலர்ப்படுக்கை விரித்து வைத்த வடிவழகி வெள்ளையம்மா நானே பெண் : தென்பாண்டி வீரன் என் மன்னவன் நான் மட்டும் கொண்டாடும் தேவன் பெண் : நானென்ன சொல்ல என் நெஞ்சிலும் நீங்காமல் வாழ்கின்ற ஜீவன் பெண் : நான் கொஞ்சும் மேனி எந்நாளுமே நீ கொஞ்சக் கூடாதடி பெண் : உன் மன்னன் வந்தால் எந்நாளுமே என் வாசல் மூடாதடி பெண் : புருஷன் என்ன பலர் விரும்பும் பொதுவுடைமை பொருளா பெண் : இரு மனைவி முருகனுக்கு இருப்பதென்ன தவறா பெண் : மனிதரெல்லாம் இறைவனல்ல பெண் : உணர்ச்சியில்லா மரமுமல்ல பெண் : விளக்கவுரை இனி எதற்கு விலகி விடு வழக்கெதற்கு பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள முதல் வீடு என் வீடு தானே பெண் : இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க இரு கரத்தில் அரவணைக்க சின்ன வீடு என் வீடுதானே பெண் : உலகறிய ஊரறிய அருந்ததியும் தானறிய சம்சாரம் எந்நாளும் இவளே பெண் : அடுத்தவரும் அறியாமல் வேறார்க்கும் தெரியாமல் ஆனந்தம் தருபவளும் இவளே பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென உறவுக் கொள்ள உரிமை உள்ள முதல் வீடு என் வீடு தானே பெண் : இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க இரு கரத்தில் அரவணைக்க சின்ன வீடு என் வீடுதானே பெண் : {பிரபு..... பெண் : அன்பே.... பெண் : பிரபு..... பெண் : அன்பே....} (2)
Song details
Singers: K. S. Chithra and Vani Jairam
Music by: Vijayanand
Lyrics by: Vaali
Release information: From Kavalan Avan Kovalan (1987) · Singer: K. S. Chithra and Vani Jairam · Lyricist: Vaali · Music: Vijayanand
- Singer: K. S. Chithra and Vani Jairam
- Film / album: Kavalan Avan Kovalan
- Composer: Vijayanand
- Lyricist: Vaali