Roman script
Singer : Pradeep Music by : Pravin Mani Male Part Neerchirai kizhiya karuvadhan payanam Vaarthaigal theliya mazhalaiyin payanam Korthidum poiyil kuzhandhaiyin payanam Mudiyum payanam… Male Part Kanavugal kuraiya ilamaiyin payanam Kaadhalgal maraiya mudhumaiyin payanam Oormarandhozhiya maranathin payanam Mudiyum payanam.. Male Part Vaaninaich chaera theeyin payanam Boomiyaich chaera neerin payanam Vetridam thaedum kaatrin payanam Ellaigal thaedum vaanin payanam..mmm Male Part Paadhai pogum pokkil Paadham pogum payanam Mudhalum mudivum ariyaa Kanavin kanavil payanam Male Part Naalaik kaalai kaana Aayul yendhi payanam Vidiyum vidiyum endrae Mudiyum mudiyum payanam..payanam Male Part Kiragangal thaandi uyirgalai thaedum Uyirinai thaandi edhuvena thaedum Thanaiyizhandhu veliyinil thaedum Manidhanin nedum payanam Male Part Mudindhidappogum payanathin neelam Kadaisiyil naangu madangugal koodum Mudivadaindha pulliyil meendum Thodangidum oru payanam Male Part Kiragangal thaandi uyirgalai thaedum Uyirinai thaandi edhuvena thaedum Thanaiyizhandhu veliyinil thaedum Manidhanin nedum payanam Male Part Mudindhidappogum payanathin neelam Kadaisiyil naangu madangugal koodum Mudivadaindha pulliyil meendum Thodangidum oru payanam…payanam
தமிழ்
பாடகர் : பிரதீப் இசையமைப்பாளர் : பிரவின் மணி ஆண் : நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம் வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம் கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம் முடியும் பயணம்..... ஆண் : கனவுகள் குறைய இளமையின் பயணம் காதல்கள் மறைய முதுமையின் பயணம் ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம் முடியும் பயணம்.... ஆண் : வானினைச் சேர தீயின் பயணம் பூமியைச் சேர நீரின் பயணம் வெற்றிடம் தேடும் காற்றின் பயணம் எல்லைகள் தேடும் வானின் பயணம்...ம்ம்ம் ஆண் : பாதை போகும் போக்கில் பாதம் போகும் பயணம் முதலும் முடிவும் அறியா கனவின் கனவில் பயணம் ஆண் : நாளைக் காலை காண ஆயுள் ஏந்திப் பயணம் விடியும் விடியும் என்றே முடியும் முடியும் பயணம்....பயணம் ஆண் : கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும் உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும் தனையிழந்து வெளியினில் தேடும் மனிதனின் நெடும் பயணம் ஆண் : முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம் கடைசியில் நான்கு மடங்குகள் கூடும் முடிவடைந்த புள்ளியில் மீண்டும் தொடங்கிடும் ஒரு பயணம் ஆண் : கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும் உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும் தனையிழந்து வெளியினில் தேடும் மனிதனின் நெடும் பயணம் ஆண் : முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம் கடைசியில் நான்கு மடங்குகள் கூடும் முடிவடைந்த புள்ளியில் மீண்டும் தொடங்கிடும் ஒரு பயணம்
Song information
Singer: Pradeep
Music by: Pravin Mani
Release information: From Payanam (2011) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Pradeep
- Film / album: Payanam
- Composer: Pravin Mani