Roman script

Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Na. Kamarasan

Chorus

Om om om om om

Om sakthi om om sakthi om

Om sakthi om om sakthi om

Om sakthi om om sakthi om….

Female Part

Naalai oru kaalam varum kaatrum pugazh paadum

Aasai alai paayum manam buththan vasamaagum

Ninaivae nee kudaiyaanaal kanavellaam nijamaagum

Female Part

Om en sooriyan ezhugiraan

Chorus : Om…om….

Female Part

Om en sooriyan ezhugiraan

Ilai thazhai meedhilae panithuli polavae

Niram maari vilaiyaadum sabalangal marainthodum

Aa….aaa…..aaa…..aaa……aaa……aaa…..

Chorus

……………………

Female Part

Aasaiyenum orr kudhirai

Alaiyum paayum arivil odum

Ennam thaerottam pogindrathae

Ilamai poraadi saaigindrathae

Female Part

Iravil oru ninaivu malara

Pagalil oru ninaivu valara

Idhyam adhil thaviththu kidakka

Sugamum thurarum kadhaigal ezhuthum

Manithan manam idhuthaanae

Female Part

Naalai oru kaalam varum kaatrum pugazh paadum

Aasai alai paayum manam buththan vasamaagum

Ninaivae nee kudaiyaanaal kanavellaam nijamaagum

Female Part

Aayiram naal tholvigalum

Oru naal pookkum thirunaal serum

Vaazhkkai engengo pogindrathi

Vasantham angellaam varugindrathu

Female Part

Aadum alai kadalil thavazhum

Vaanil pala paravai parakkum

Naalum oru thirami valarum

Thadaigal udaiyum nadanthu nadanthu

Thalaimai perum anupavaae

Female Part

Naalai oru kaalam varum kaatrum pugazh paadum

Aasai alai paayum manam buththan vasamaagum

Ninaivae nee kudaiyaanaal kanavellaam nijamaagum

Female Part

Om en sooriyan ezhugiraan

Ilai thazhai meedhilae panithuli polavae

Niram maari vilaiyaadum sabalangal marainthodum

Aa….aaa…..aaa…..aaa……aaa……aaa…..

Chorus

Om sakthi om om sakthi om

Om sakthi om om sakthi om…..

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : நா. காமராசன்

குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்....

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்...

பெண் : நாளை ஒரு காலம் வரும் காற்றும் புகழ் பாடும்

ஆசை அலை பாயும் மனம் புத்தன் வசமாகும்

நினைவே நீ குடையானால் கனவெல்லாம் நிஜமாகும்

பெண் : ஓம் என சூரியன் எழுகிறான்

குழு : ஓம்....ஓம்.....

பெண் : ஓம் என சூரியன் எழுகிறான்

இலை தழை மீதிலே பனித்துளி போலவே

நிறம் மாறி விளையாடும் சபலங்கள் மறைந்தோடும்

ஆஆ......ஆஆ......ஆஆ.....ஆஆ.....ஆஆ......ஆஆ........

குழு : ...........................

பெண் : ஆசையெனும் ஓர் குதிரை

அலையும் பாயும் அறிவில் ஓடும்

எண்ணம் தேரோட்டம் போகின்றதே

இளமை போராடி சாய்கின்றதே

பெண் : இரவில் ஒரு நினைவு மலர

பகலில் ஒரு நினைவு வளர

இதயம் அதில் தவித்து கிடக்க

சுகமும் துயரும் கதைகள் எழுதும்

மனிதன் மனம் இதுதானே......

பெண் : நாளை ஒரு காலம் வரும் காற்றும் புகழ் பாடும்

ஆசை அலை பாயும் மனம் புத்தன் வசமாகும்

நினைவே நீ குடையானால் கனவெல்லாம் நிஜமாகும்

பெண் : ஆயிரம் நாள் தோல்விகளும்

ஒரு நாள் பூக்கும் திருநாள் சேரும்

வாழ்க்கை எங்கெங்கே போகின்றதோ

வசந்தம் அங்கெல்லாம் வருகின்றது

பெண் : ஆடும் அலை கடலில் தவழும்

வானில் பல பறவை பறக்கும்

நாளும் ஒரு திறமை வளரும்

தடைகள் உடையும் நடந்து நடந்து

தலைமை பெறும் அனுபவமே

பெண் : நாளை ஒரு காலம் வரும் காற்றும் புகழ் பாடும்

ஆசை அலை பாயும் மனம் புத்தன் வசமாகும்

நினைவே நீ குடையானால் கனவெல்லாம் நிஜமாகும்

பெண் : ஓம் என சூரியன் எழுகிறான்

இலை தழை மீதிலே பனித்துளி போலவே

நிறம் மாறி விளையாடும் சபலங்கள் மறைந்தோடும்

ஆஆ......ஆஆ......ஆஆ.....ஆஆ.....ஆஆ......ஆஆ........

குழு : ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம்....

Song information

Singer: Vani Jairam

Music by: Shankar Ganesh

Lyrics by: Na. Kamarasan

Release information: From Thiramai (1985) · Singer: Vani Jairam · Lyricist: Na. Kamarasan · Music: Shankar Ganesh

Explore this song