தமிழ்

ஆண் : இது என்ன
கண்ணில் தாவுது
ஒரு மான் இங்கு
இதமொன்று
நெஞ்சில் காயுது
அது ஏன் இங்கு
சொட்டு சொட்டாய்
என் மனதை சுண்டுகிறாள்
ஆண் : ஏக்கங்கள் நான் கொள்ள
தாக்கங்கள்தான் இன்று
சந்திக்கிறேன்
தூக்கங்கள் ஏன் இல்லை
நேற்று வரை
என்று சிந்திக்கிறேன்
ஆண் : நெளிகின்றேன்
பொறிகின்றேன்
விழுகின்றேன்
அழுகின்றேன்
கொத்து கொத்தாய்
என் மனதை கொஞ்சுகிறாள்
ஆண் : பாலை நிலமென வாடுமா
பாவை எனது ஆகுமா
பாத நினைவுகள் ஆறுமா
பாதை இனி வீணாகுமா
நாளை என்னாகும்
ஏதும் சொல்லாதோ
போராகுமா
ஆண் : நெளிகின்றேன்
பொறிகின்றேன்
விழுகின்றேன்
அழுகின்றேன்
கொஞ்சி கொஞ்சி
என் மனதை கொத்துகிறாள்
ஆண் : ம்ம்ம் விதை ஒன்று
நெஞ்சில் வீசியதொரு
மான் அன்று
தளிர் ஒன்று
கண்ணில் காணுகிறேன்
நான் இன்று
பொங்கி வந்து
என் உயிரில் தாங்குகிறாள்
ஆஆஆ

Song details

படம்: முண்டாசுப்பட்டி (2014)

இசை: சீன் ரோல்டன்

பாடலாசிரியர்: முத்தமிழ்

பாடியவர்கள்: ஹரிசரண் & கல்யாணி நாயர்

Album: முண்டாசுப்பட்டி

Song video

Watch on YouTube